ஹேசில்வுட் மிரட்டல்: பவர்பிளேயில் 4 விக்கெட்டுகளை இழந்து இந்தியா தடுமாற்றம்
- சஞ்சு சாம்சன் 2 ரன்னிலும் கேப்டன் சூர்யகுமார் யாதவ் 1 ரன்னிலும் திலக் வர்மா டக் அவுட் ஆனார்கள்.
- ஆஸ்திரேலியா தரப்பில் ஹேசில்வுட் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்
மெல்போர்ன்:
ஆஸ்திரேலியா - இந்தியா அணிகளுக்கு இடையேயான ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரின் 2-வது போட்டி, மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் இன்று நடைபெறுகிறது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.
அதன்படி இந்திய அணியின் தொடக்க வீரர்களாக சுப்மன் கில்- அபிஷேக் சர்மா களமிறங்கினர். முதல் ஓவரில் சுப்மன் கில் 6 பந்துகள் சந்தித்து 1 ரன் மட்டுமே எடுத்தார். அதனை தொடர்ந்து 10 பந்துகளில் 5 எடுத்த நிலையில் அவர் ஆட்டமிழந்தார்.
அடுத்து வந்த சஞ்சு சாம்சன் 2 ரன்னிலும் கேப்டன் சூர்யகுமார் யாதவ் 1 ரன்னிலும் திலக் வர்மா டக் அவுட்டிலும் நடையை கட்டினார்.
இதனால் பவர் பிளேயில் இந்திய அணி 40 ரன்களுக்கு 4 முக்கிய விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது. அபிஷேக் சர்மாவும் அக்சர் படேலும் விளையாடி வருகின்றனர். ஆஸ்திரேலியா தரப்பில் ஹேசில்வுட் 3 ஓவர்களில் 6 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.