விளையாட்டு

ஆசிய அணிகள் பேட்மிண்டன் சாம்பியன்ஷிப்: அரையிறுதிக்கு முன்னேறியது இந்தியா

Published On 2024-02-16 10:13 GMT   |   Update On 2024-02-16 10:13 GMT
  • இன்று (பிப் 16) நடைபெற்ற காலிறுதி ஆட்டத்தில் ஹாங்காங்கை 3-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்திய இந்திய மகளிர் அணி அரையிறுதிக்கு முன்னேறியது.
  • இதன் வாயிலாக வரலாற்றில் முதல் முறையாக ஆசிய அணி பேட்மிண்டன் சாம்பியன்ஷிப்பில் தனது முதல் பதக்கத்தை இந்திய அணி உறுதி செய்தது.

ஆசிய அணிகள் பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் தொடர் மலேசியாவில் உள்ள சிலாங்கூரில் நடைபெற்று வருகிறது. அதில், இன்று (பிப் 16) நடைபெற்ற காலிறுதி ஆட்டத்தில் ஹாங்காங்கை 3-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்திய இந்திய மகளிர் அணி அரையிறுதிக்கு முன்னேறியது.

இதன் வாயிலாக வரலாற்றில் முதல் முறையாக ஆசிய அணி பேட்மிண்டன் சாம்பியன்ஷிப்பில் தனது முதல் பதக்கத்தை இந்திய அணி உறுதி செய்தது.

கடந்த செவ்வாயன்று (பிப் 13) நடைபெற்ற போட்டியில் இந்திய அணி 3-2 என்ற கணக்கில் சீன அணியை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறியிருந்தது.

இன்று நடைபெற்ற காலிறுதி ஆட்டத்தில் ஒற்றையர் பிரிவில் விளையாடிய பிவி சிந்து 21-7, 16-21, 21-12 என்ற கணக்கில் லோ சின் யான் ஹேப்பியை தோற்கடித்தார்.

இரட்டையர் பிரிவில் விளையாடிய தனிஷா க்ராஸ்டோ மற்றும் அஷ்வினி பொன்னப்பா ஆகியோர் 21-10, 21-1 என்ற செட் கணக்கில் யுங் நகா டிங் & யுங் புய் லாம் ஆகியோரை தோற்கடித்தனர். அஷ்மிதா சாலிஹா 21-12, 21-13 என்ற செட் கணக்கில் யுங் சும் யீயை வென்றார்

இந்திய மகளிர் அணிக்கு பதக்கம் உறுதியாகிவிட்ட நிலையில், முதலிடத்தில் உள்ள ஜப்பான் மற்றும் சீனா இடையிலான மற்றொரு காலிறுதிப் போட்டியில் வெற்றி பெறும் அணியை இந்தியா இறுதிப்போட்டியில் எதிர்கொள்ளும். மேலும் இந்திய ஆடவர் அணி தனது காலிறுதி ஆட்டத்தில் ஜப்பானை எதிர்கொள்கிறது.

Tags:    

Similar News