விளையாட்டு
null
ஆசிய தடகள போட்டி: மும்முறை தாண்டுதலில் வெள்ளிப் பதக்கம் வென்ற தமிழக வீரர்
- 26-வது ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டி தென்கொரியாவின் குமி நகரில் நேற்று முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது.
- இதில் 59 பேர் கொண்ட இந்திய அணியில் 9 தமிழக வீரர்களும் அடங்கும்.
26-வது ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டி தென்கொரியாவின் குமி நகரில் நேற்று முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. 43 நாடுகளை சேர்ந்த 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்கிறார்கள். இதில் 59 பேர் கொண்ட இந்திய அணியில் 9 தமிழக வீரர்களும் அடங்கும்.
நேற்று நடந்த 10 ஆயிரம் மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் இந்தியாவின் குல்வீர் சிங் தங்கப்பதக்கமும் 20 கி.மீட்டர் நடைப்பந்தய போட்டியில் செர்வின் வெண்கலப்பதக்கமும் வென்றனர்.
இந்நிலையில் இன்று நடைபெற்ற மும்முறை தாண்டுதல் விளையாட்டில் தமிழ்நாட்டைச் சேர்ந்த பிரவீன் சித்திரவேல் வெள்ளிப் பதக்கம் வென்று அசத்தியுள்ளார்.