விளையாட்டு

அபிஷேக் வர்மா,  ஜோதி சுரேகா வென்னம்

உலக கோப்பை வில்வித்தை போட்டி- கலப்பு இரட்டையர் பிரிவில் இந்திய ஜோடி தங்கம் வென்றது

Update: 2022-06-25 20:13 GMT
  • கலப்பு இரட்டையர் பிரிவில் பிரெஞ்ச் ஜோடிக்கு வெள்ளி பதக்கம் கிடைத்தது.
  • கலப்பு அணி பிரிவில் இந்தியா தங்கம் வெல்வது இதுவே முதல்முறை.

பாரீஸ்:

உலக கோப்பை வில்வித்தை போட்டிகள், பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடைபெற்று வருகின்றன. நேற்று நடைபெற்ற கலப்பு அணிகள் பிரிவு இறுதி ஆட்டத்தில் இந்தியாவின் அபிஷேக் வர்மா- ஜோதி சுரேகா வென்னம் ஜோடி தங்கம் வென்றது.

விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் 152-149 என்ற புள்ளி கணக்கில் பிரான்சின் ஜீன் பிலிப் போல்ச்- சோபி டாட்மோன்ட் ஜோடியை வீழ்த்திய இந்திய ஜோடி தங்கம் வென்றுள்ளது. உலக கோப்பை வில்வித்தை கலப்பு அணி பிரிவில் இந்தியா தங்கம் வெல்வது இதுவே முதல்முறை.

Tags:    

Similar News