2030 காமன்வெல்த் போட்டியை அகமதாபாத்தில் நடத்த பரிந்துரை செய்தது நிர்வாகக்குழு
- காமன்வெல்த் நிர்வாகக்குழு அகமதாபாத்தில் போட்டியை நடத்த பரிந்துரை செய்துள்ளது.
- நவம்பர் 26ஆம் தேதி பொதுக்கூட்டம் நடைபெறும். அதில் இறுதி முடிவு எடுக்கப்படும்.
2030ஆம் ஆண்டு காமன்வெல்த் போட்டியை இந்தியா நடத்த ஆர்வம் காட்டி வந்தது. பிரதமர் மோடி, அமித் ஷா இந்தியாவில் நடத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்படும். இதற்காக விண்ணப்பிக்கப்படும் என தெரிவித்திருந்தனர்.
அதன்படி இந்தியா சார்பில் போட்டியை நடத்த விருப்பம் தெரிவித்து விண்ணப்பம் செய்யப்பட்டது. இந்த நிலையில் காமன்வெல்த் போட்டி நிர்வாகக்குழு அகமதாபாத்தில் 2023 காமன்வெல்த் போட்டியை நடத்த பரிந்துரை செய்துள்ளது.
பரிந்துரை காமன்வெல்த் போட்டிக்கான முழு உறுப்பினருக்கு அனுப்பப்பட்டு, அதன்பின் இறுதி முடிவு நவம்பர் 26ஆம் தேதி எடுக்கப்படும். அன்றைய தினம் காமல்வெல்த் விளையாட்டின் ஆண்டு பொதுக்கூட்டம் நடைபெறும் அதில் முடிவு செய்யப்படும்.
இந்தியா 2036ஆம் ஆண்டு ஒலிம்பிக்கை போட்டியை அகமதாபாத்தில் நடத்த விரும்புகிறது. காமன்வெல்த் போட்டியை நடத்துவதற்கான வாய்ப்பு கிடைத்தால், ஒலிம்பிக் போட்டிக்கான முன்னெடுப்பாக பார்க்கப்படும்.
இந்தியா கடைசியாக 2010ஆம் ஆண்டு டெல்லியில் காமன்வெல்த் போட்டியை நடத்தியது.