விளையாட்டு

8 வயது மாணவன் சிலம்பு போட்டியில் சாதனை

Published On 2025-01-26 16:53 IST   |   Update On 2025-01-26 16:53:00 IST
  • அஸ்வின் ஒற்றை கொம்பு மற்றும் தொடு முறை போட்டியில் கலந்து கொண்டு தேசிய அளவில் தங்கப்பதக்கம் வென்றுள்ளார்.
  • தெற்கு ஆசியாவில் நடக்கும் சர்வதேச போட்டியில் கலந்து கொள்ளவும் தேர்வாகியுள்ளார்.

சர்வதேச சிலம்பு பெடரேஷன் ஆப் இந்தியா குழுமம் 3-வது ஏசியன் சாம்பியன் ஷிப் -2025 சிலம்பு போட்டியில் ஓசூரில் நடத்தியது.

இதில் மணலி மாத்தூர் எவர்வின் வித்யாஷ்ரம் பள்ளியில் படிக்கும் சென்னையை சேர்ந்த 8 வயது மாணவன் எம்.அஸ்வின் ஒற்றை கொம்பு மற்றும் தொடு முறை போட்டியில் கலந்து கொண்டு தேசிய அளவில் தங்கப்பதக்கம் வென்றுள்ளார்.

மேலும் தெற்கு ஆசியாவில் நடக்கும் சர்வதேச போட்டியில் கலந்து கொள்ளவும் தேர்வாகியுள்ளார். தமிழர்களின் பாரம்பரிய சிலம்பு விளையாட்டு போட்டியில் தேசிய அளவில் வெற்றி பெற்றுள்ள மாணவன் அஸ்வினை சிலம்ப பயிற்சியாளர்கள் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.

Tags:    

Similar News