விளையாட்டு
பெர்குஷன், உம்ரான் மாலிக்

ஐபிஎல் கிரிக்கெட்டில் அதிவேக பந்து வீச்சை பதிவு செய்தார் பெர்குசன்

Published On 2022-05-30 00:54 IST   |   Update On 2022-05-30 00:54:00 IST
நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் டெல்லி அணிக்கு எதிராக ஐதராபாத் வீரர் உம்ரான் மாலிக் 157 கி.மீ வேகத்தில் பந்து வீசியிருந்தார்.
 அகமதாபாத்:

குஜராத் மாநிலம் அகமதாபாத் நகரில் உள்ள பிரதமர் நரேந்திரமோடி மைதானத்தில் நேற்று ஐபிஎல் இறுதி போட்டி நடைபெற்றது. 

இந்த போட்டியில் முதலில் ராஜஸ்தான் அணி களம் இறங்கி விளையாடிய போது  குஜராத் வேக பந்துவீச்சாளர் லாக்கி பெர்குசன் 157.3 கி.மீ வேகத்தில் பந்துவீசி அசத்தியுள்ளார். இதன் மூலம் நடப்பு ஐபிஎல் சீசனின் வேகமான பந்தை வீசி பதிவு செய்து அவர் சாதனை படைத்துள்ளார். 

இதற்கு முன்னர் ஐதராபாத் அணியின் இளம் வேகப்பந்து வீச்சாளர் உம்ரான் மாலிக், டெல்லி அணிக்கு எதிராக 157 கி.மீ வேகத்தில் பந்து வீசி சாதனை படைத்திருந்தார். தற்போது பெர்குசன் அந்த சாதனையை முறியடித்துள்ளார்.


Tags:    

Similar News