விளையாட்டு
சதமடித்த தமீம் இக்பால்

தமீம் இக்பால் அபார சதம் - 3ம் நாள் முடிவில் வங்காளதேசம் 318/3

Published On 2022-05-17 13:40 GMT   |   Update On 2022-05-17 13:40 GMT
இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் வங்காளதேச அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் முதல் விக்கெட்டுக்கு 162 ரன்கள் சேர்த்தனர்.
சட்டோகிராம்:

வங்காளதேசம், இலங்கை அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் சட்டோகிராமில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது.

அதன்படி, முதலில் ஆடிய இலங்கை அணி 397 ரன்னில் ஆல் அவுட்டானது. ஆல்ரவுண்டர் ஏஞ்சலோ மேத்யூஸ் பொறுப்புடன் ஆடி இரட்டை சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 199 ரன்னில் ஆட்டமிழந்தார். நேற்று 2-ம் நாள் முடிவில் வங்காளதேச அணி விக்கெட் இழப்பின்றி 76 ரன்கள் எடுத்திருந்தது.

இந்நிலையில்,  3-வது நாள் ஆட்டம் இன்று நடைபெற்றது. வங்காளதேச அணி தொடக்க வீரர் ஹசன் ஜாய் அரை சதமடித்து 58 ரன்னில் அவுட்டானார். அடுத்து வந்த ஹொசைன் சாண்டோ மற்றும் மோமினுல் ஹக் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.

ஒருபுறம் சிறப்பாக ஆடிய தமீம் இக்பால் சதமடித்து அசத்தினார். 133 ரன்கள் எடுத்த நிலையில் அவர் ரிட்டையர்டு ஹர்ட் முறையில் வெளியேறினார்.

தொடர்ந்து ஆடிய முஷ்பிகுர் ரஹீம், லிட்டன் தாஸ் ஜோடி மேற்கொண்டு விக்கெட் விழாமல் பார்த்துக் கொண்டது. 

இறுதியில், மூன்றாம் நாள் முடிவில் வங்காளதேச அணி 3 விக்கெட்டுக்கு 318 ரன்கள் எடுத்துள்ளது. முஷ்பிகுர் ரஹீம் 53 ரன்னும், லிட்டன் தாஸ் 54 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளனர். இலங்கை அணியை விட வங்காளதேச அணி 79 ரன்கள் பின்தங்கியுள்ளது.
Tags:    

Similar News