விளையாட்டு
கூடைப்பந்தாட்ட போட்டியில் ஆக்ரோஷத்துடன் விளையாடிய அணிகள்.

பெரியகுளத்தில் கூடைப்பந்தாட்ட போட்டி

Published On 2022-05-17 08:00 GMT   |   Update On 2022-05-17 08:00 GMT
பெரியகுளத்தில் அகில இந்திய அளவிலான கூடைப்பந்தாட்டபோட்டி நடைபெற்றது
பெரியகுளம்:

தேனிமாவட்டம் பெரியகுளத்தில் சில்வர் ஜூபிலி ஸ்போர்ட்ஸ் கிளப் நடத்தும் சிதம்பர சூரியநாராயணன் நினைவு சுழற்கோப்பைக்கான  61-ஆம் ஆண்டு அகில இந்திய அளவிலான கூடைப்பந்தாட்டப் போட்டிகள் தொடங்கியது.

கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா நோய்த் தொற்று காரணமாக அகில இந்திய அளவிலான கூடைப்பந்தாட்ட போட்டிகள் நடைபெறாமல் இருந்த நிலையில் நேற்று முன்தினம் துவங்கிய போட்டிகள் காலை மற்றும் மாலை இரவு வேளைகளில் போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. நேற்று இரண்டாவது நாளாக நடைபெற்ற முதல் போட்டியை ரவீந்திரநாத் எம்.பி., பங்கேற்று தொடங்கி வைத்தார்.

முதலாவதாக நடைபெற்ற போட்டியில் நாகர்கோவில் ஏசியன் பிபிசி அணியும், கரூர் டெக்ஸ் சிட்டி அணியும், போட்டியிட்டதில் நாகர்கோவில் ஏசியன் பிபிசி அணி 83க்கு 78 என்ற புள்ளிகள் அடிப்படையில் வெற்றி பெற்றது.

இதனை தொடர்ந்து 2-வதாக நடைபெற்ற போட்டியில் சென்னை அணியும் ,  திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரி அணியுடன் நடைபெற்ற போட்டியில், சென்னை அணி 90க்கு 66 என்ற புள்ளிகள் அடிப்படையில் வெற்றி பெற்றது.

3-வதாக நடைபெற்ற போட்டியில் கேரள காவல்துறை அணியும் திருநெல்வேலி அணிக்கும், இடையே நடைபெற்ற போட்டியில் கேரள காவல்துறை அணி 73க்கு 35 என்ற புள்ளிகள் அடிப்படையில் வெற்றி பெற்றது.

4-வது நடைபெற்ற போட்டியில் சென்னை மாணவர் விடுதி அணியும் சேலம் பிபிசி அணிக்கும் இடையே நடைபெற்ற போட்டியில் சென்னை மாணவர் விடுதி அணி 69க்கு 56 என்ற புள்ளிகள் அடிப்படையில் வெற்றி பெற்றது. இதற்கான ஏற்பாடுகளை செயலாளர்சூரியவேல், பொருளாளர் செல்வராஜ் மற்றும் குழுவினர் செய்திருந்தனர்.
Tags:    

Similar News