விளையாட்டு
சூர்யகுமார் யாதவ், ஆகாஷ் மத்வால்

மும்பை அணியில் இருந்து சூர்யகுமார் யாதவ் விலகல்: ஆகாஷ் மத்வால் இணைப்பு

Published On 2022-05-17 00:51 IST   |   Update On 2022-05-17 00:51:00 IST
ஐபிஎல் தொடரில் பிளே ஆப் சுற்று வாய்ப்பை இழந்து விட்ட மும்பை அணிக்கு இன்னும் 2 லீக் போட்டிகள் மீதம் உள்ளன.
மும்பை:

குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு ஆட்டத்தின் போது மும்பை இந்தியன்ஸ் அணியின் நட்சத்திர வீரர் சூர்யகுமார் யாதவ்விற்கு இடது கையில் காயம் ஏற்பட்டது. இதனால் அவர் ஐபிஎல் ஆட்டங்களில் இருந்து விலகினார்.

அவரது உடல்நிலை குறித்து உடல் தகுதி நிபுணர்களுடன் கலந்து ஆலோசித்த மும்பை இந்தியன்ஸ் அணி நிர்வாகம் அவரை அணியில் இருந்து விடுவிக்கும் முடிவை எடுத்தது. 

இதையடுத்து சூர்யகுமார் யாதவிற்கு உத்தரகாண்ட் மாநிலத்தை சேர்ந்த வேகப்பந்து வீச்சாளர் ஆகாஷ் மத்வால் மும்பை அணியில் விளையாட ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். 

மும்பை அணியின் நெட் பந்துவீச்சாளராக இருந்து வந்த அவரை மும்பை அணி தற்போது ரூ.20 லட்சம் கொடுத்து வாங்கியுள்ளது.

நடப்பு தொடரில் ஏற்கனவே பிளே ஆப் சுற்று வாய்ப்பை மும்பை அணி இழந்துவிட்டது. இருப்பினும் அந்த அணிக்கு இன்னும் 2 லீக் போட்டிகள் மீதம் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Similar News