விளையாட்டு
ஆண்ட்ரூ ரசல்

ஐ.பி.எல் தொடரில் குறைந்த பந்துகளில் 2,000 ரன்கள் - ரசல் புதிய சாதனை

Published On 2022-05-15 07:56 GMT   |   Update On 2022-05-15 07:56 GMT
ஐதராபாத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 49 ரன்கள் எடுத்ததுடன், 3 விக்கெட்களையும் கைப்பற்றிய ஆண்ட்ரூ ரசல் ஆட்ட நாயகன் விருது பெற்றார்.
மும்பை:

ஐ.பி.எல். தொடரின் 61-வது லீக் ஆட்டம் புனேவில் நேற்று நடைபெற்றது. இதில் சன்ரைசர்ஸ் ஐதராபாத், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின. 
டாஸ் வென்று முதலில் பேட் செய்த கொல்கத்தா 20 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 177 ரன்களை எடுத்தது. ஆண்ட்ரூ ரசல் அதிகபட்சமாக 49 ரன்களை எடுத்தார். 

அடுத்து விளையாடிய ஐதராபாத் அணி  20 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 123 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் கொல்கத்தா அணி 54 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இந்நிலையில், நேற்றைய போட்டியில் 14-வது ரன் எடுத்தபோது குறைந்த பந்துகளில் 1,115 பந்துகளில் 2,000 ரன்கள் எடுத்த வீரர் என்ற சாதனையை ரசல் படைத்துள்ளார்.

ஆண்ட்ரூ ரசல் 97 போட்டிகளில் விளையாடி 2,030 ரன்களை எடுத்துள்ளார்.
Tags:    

Similar News