விளையாட்டு
உம்ரான் மாலிக்

உம்ரான் மாலிக் மட்டும் பாகிஸ்தானில் இருந்திருந்தால்... கம்ரான் அக்மல் கருத்து

Published On 2022-05-15 06:35 GMT   |   Update On 2022-05-15 06:35 GMT
பிரெட் லி, சோயப் அக்தர் இருவரும் அதிவேகமாக பந்துவீசி விக்கெட்டுகளை வீழ்த்தினர் என கம்ரான் அக்மல் தெரிவித்துள்ளார்.
இஸ்லாமாபாத்:

ஜம்மு காஷ்மீரை சேர்ந்த கிரிக்கெட் வீரர் உம்ரான் மாலிக் இந்த ஆண்டு நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்.

டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் உம்ரான் மாலிக் வீசிய 157 கி.மீ வேகமான பந்து இந்த தொடரின் அதிவேகமான பந்துவீச்சு என்ற சாதனையையும் பெற்றுள்ளது.

22 வயதாகும் உம்ரான் மாலிக் இந்திய அணியில் இடம்பெற வேண்டும் என இந்திய முன்னாள் வீரர்கள் பலரும் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் உம்ரான் மாலிக் குறித்து பாகிஸ்தான் முன்னாள் வீரர் கம்ரான் அக்மல் கருத்து ஒன்றை தெரிவித்துள்ளார்.

அவர் கூறியதாவது:-

உம்ரான் மாலிக் பாகிஸ்தானில் இருந்திருந்தால், இந்நேரம் தேசிய அணியில் இடம்பெற்றிருப்பார். அவருடைய எகானமி அதிகமாக இருக்கிறது. ஆனால் அவருக்கு வேகமும், விக்கெட் எடுக்கும் சதவீதமும் அதிகமாக இருக்கிறது. வேகப்பந்துவீச்சாளர்கள் அப்படி தான் பந்து வீசுவார்கள். ஆஸ்திரேலிய வீரர் பிரெட் லீ அதுபோல தான் இருந்தார். சோயப் அக்தரும் அவரைப்போல தான் இருந்தார்.

மேலும் இந்த ஆண்டு நடைபெறும் டி20 உலக்கோப்பையில் ஆஸ்திரேலிய மைதானங்களுக்கு வேகப்பந்துவீச்சு தேவை என கூறியுள்ளார்.

இவ்வாறு கம்ரான் அக்மல் தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News