விளையாட்டு
நோவக் ஜோகோவிச்

இத்தாலியன் ஓபன் டென்னிஸ் - இறுதிப்போட்டிக்கு முன்னேறினார் ஜோகோவிச்

Update: 2022-05-15 02:29 GMT
இத்தாலியன் ஓபன் டென்னிஸ் போட்டியின் இறுதிப் போட்டியில் ஜோகோவிச், கிரீஸ் வீரர் சிட்சிபாசை எதிர்கொள்ள உள்ளார்.
ரோம் :

இத்தாலியன் ஓபன் டென்னிஸ் போட்டியின் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று இரவு நடைபெற்ற அரையிறுதி சுற்றில் செர்பியாவின் நோவக் ஜோகோவிச், நார்வேயின் காஸ்பர் ரூட்டை எதிர்கொண்டார்.

இந்த ஆட்டத்தின் தொடக்கம் முதலே அதிரடியாக ஆடிய ஜோகோவிச் 6-4, 6-3 என நேர் செட்களில் வென்று இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.

இன்று இரவு நடக்கும் இறுதிப் போட்டியில் ஜோகோவிச், சிட்சிபாசை எதிர்கொள்கிறார்.
Tags:    

Similar News