விளையாட்டு
ஷ்ரேயாஸ் அய்யர், ஆண்ட்ரே ரசல்

ஐபிஎல் இறுதி ஆட்டத்திலும் எங்களது திட்டம் வெற்றி பெறும் - கொல்கத்தா கேப்டன் ஷ்ரேயாஸ் அய்யர் நம்பிக்கை

Update: 2022-05-14 20:28 GMT
ரசலுக்கு முடிந்தவரை பேட்டிங் செய்ய வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்பதே நேற்றைய போட்டியில் எங்களது திட்டமாக இருந்தது என்று ஷ்ரேயாஸ் குறிப்பிட்டார்.
மும்பை:

ஐபிஎல் போட்டியில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் ஐதராபாத் சன் ரைசர்ஸ் அணியை 54 ரன்கள் வித்தியாசத்தில்  கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வீழ்த்தியது.

இந்த வெற்றி குறித்து போட்டி நிறைவுக்கு பின்னர் பேட்டியளித்த கொல்கத்தா கேப்டன் ஷ்ரேயாஸ் அய்யர்,  தற்போதைய சூழலில் தமது அணி இழப்பதற்கு எதுவும் இல்லை என்ற நிலையில் உள்ளது என்றார்.

இந்த போட்டியில் தமது வீரர்கள் பயமின்றி விளையாடியதாகவும், அனைவரும் சரியாக செயல்பட்டதாகவும் அவர் கூறினார். 

எனினும் தமது அணி முழு திறனுடன் இன்னும் விளையாடவில்லை,  அது குறித்து ஆட்டத்திற்கு முன்னர் சக வீரர்களிடம் பேசியதாவும் அவர் தெரிவித்தார்.

ஆண்ட்ரே ரசல் அதிக ரன் எடுக்க வேண்டும் என்பதால், அவர் பேட்டிங் செய்து கொண்டிருந்தபோது சக வீரர் முடிந்தவரை அவருக்கு பேட்டிங் வாய்ப்பை கொடுப்பதே எங்களது திட்டமாக இருந்தது என்றார். 

கடைசி ஓவரை வாஷிங்டன் சுந்தர் வீச இருப்பதை தெரிந்து அவரை குறி வைத்தோம் என்றும் அது சிறப்பாக வேலை செய்தது என்றும் கூறிய ஷ்ரேயாஸ்,  இறுதி ஆட்டத்திலும் இந்த திட்டம் சிறப்பாக செயல்படும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.
Tags:    

Similar News