விளையாட்டு
அவுட் ஆன வேகத்தில் சாப்பிட சென்ற ரசல்

அப்போ எனக்கு பசிக்கும்ல: அவுட் ஆன வேகத்தில் சாப்பிட சென்ற ரசல்- கலாய்க்கும் ரசிகர்கள்

Published On 2022-04-29 14:10 IST   |   Update On 2022-04-29 18:45:00 IST
டெல்லி அணிக்கு எதிரான நேற்றைய போட்டியின் போது கொல்கத்தா அணியின் அதிரடி வீரர் ரசல் அவுட் ஆன வேகத்தில் சாப்பாடு சென்ற காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
ஐபிஎல் கிரிக்கெட்டில் 41-வது லீக் ஆட்டத்தில் டெல்லி-கொல்கத்தா அணிகள் மோதின. இந்த போட்டியில் டெல்லி அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. தொடர்ந்து 5 போட்டிகளில் கொல்கத்தா அணி தோல்வியை தழுவி உள்ளது. 

நேற்றைய போட்டியில் கொல்கத்தா அணியின் அதிரடி வீரர் ஆந்த்ரே ரசல் 3 பந்துகளை சந்தித்து ரன் ஏதும் எடுக்காமல் அவுட் ஆனார். குல்தீப் யாதவ் வீசிய 14-வது ஓவரின் முதல் பந்தில் ஷ்ரேயாஸ் அவுட் ஆனார். அப்போது கொல்கத்தா அணி 83 ரன்களுக்கு 5 விக்கெட்டை பறிக்கொடுத்தது. அந்த நிலையில் அடுத்து வந்த ரசல் முதல் 2 பந்தில் ரன் எடுக்காமல் இருந்த அவர் 3-வது பந்தை பேட்டிங் கோட்டிற்கு வெளியே சென்ற ஆட முயற்சித்த போது ஸ்டெம்பிங் முறையில் அவுட் ஆனார். 

இக்கட்டமான சூழலில் தனது விக்கெட்டை இழந்த ரசல் குறித்து ரசிகர்கள் ஆத்திரமடைந்தனர். இந்நிலையில் அவுட் ஆன வேகத்தில் ரசல் அறைக்கு சென்று சாப்பிட ஆரம்பித்தார். அவர் சாப்பாடு எடுத்து வைக்கும் வீடியோ மற்றும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 



இதனை கண்ட ரசிகர்கள் டுவிட்டரில் ரசலை வறுத்தெடுத்து வருகின்றனர். ஒரு ரசிகர் கூறியதாவது:- தாமதமாக வந்தால் உணவு முடிந்து விடும் என்று சொல்லியிருப்பாங்க. அதனால் தான் உடனே அவுட் ஆகி சாப்பிட சென்று விட்டார் என அவர் கூறினார்.

இந்த சீசனில் ஆந்த்ரே ரசல் 9 போட்டிகளில் விளையாடி 227 ரன்கள் எடுத்துள்ளார். கடந்த 10-வது சீசனில் ரசல் 1927 ரன்களும் 82 விக்கெட்டுகளை வீழ்த்தி உள்ளார்.  என்பது குறிப்பிடத்தக்கது.

Similar News