விளையாட்டு
கூடைப்பந்து

மாநில கூடைப்பந்து போட்டி- சென்னையில் இன்று தொடக்கம்

Published On 2022-04-29 04:39 IST   |   Update On 2022-04-29 04:39:00 IST
இந்த போட்டிகளில் ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவில் மொத்தம் 104 அணிகள் கலந்து கொள்கின்றன.
சென்னை:

ரைசிங் ஸ்டார் கூடைப்பந்து கிளப் சார்பில் 16-வது மாநில அளவிலான கூடைப்பந்து போட்டி சென்னையில் இன்று தொடங்கி மே 7-ந் தேதி வரை நடக்கிறது. 

இதில் ஆண்கள் பிரிவில் வருமானவரி, இந்தியன் வங்கி, ஐ.சி.எப்., தமிழ்நாடு சிறப்பு போலீஸ், சுங்கஇலாகா உள்பட 74 அணிகளும், பெண்கள் பிரிவில் ரைசிங் ஸ்டார், சங்கம் கிளப், இந்துஸ்தான் உள்பட 30 அணிகளும் கலந்து கொள்கின்றன. 

இந்த போட்டியின் லீக் ஆட்டங்கள் இன்று முதல் மே 3-ந் தேதி வரை நேரு ஸ்டேடியத்திலும், நாக்- அவுட் சுற்று ஆட்டங்கள் மே 4-ந் தேதி முதல் தியாகராயநகர் வெங்கடநாராயணா ரோட்டில் உள்ள மாநகராட்சி திடலிலும் நடக்கிறது. 

தினசரி போட்டிகள் மாலை 4 மணிக்கு தொடங்கி மின்னொளியில் நடைபெறும். இந்த போட்டியில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகளுக்கு மொத்தம் ரூ.2 லட்சம் ரொக்கப்பரிசாக வழங்கப்படும் என்று ரைசிங் ஸ்டார் கிளப் செயலாளர் என்.சம்பத் தெரிவித்துள்ளார். 

Similar News