விளையாட்டு
ஷுப்மான் கில்

ஷுப்மான் கில், ரஷித் கான் அபாரம் - பஞ்சாப்பை வீழ்த்தி திரில் வெற்றி பெற்றது குஜராத்

Published On 2022-04-08 18:02 GMT   |   Update On 2022-04-08 23:54 GMT
பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டத்தில் குஜராத் அணியின் ஷுப்மான் கில் அதிரடியாக ஆடி 59 பந்தில் 96 ரன்கள் எடுத்து அவுட்டானார்.
மும்பை:

ஐ.பி.எல். கிரிக்கெட்டின் 16-வது லீக் ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ், பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற குஜராத் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.

அதன்படி, முதலில் பேட் செய்த பஞ்சாப் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 189 ரன்கள் எடுத்தது. அதிரடியாக விளையாடி அரை சதம் அடித்த லிவிங்ஸ்டன் 27 பந்துகளில் 64 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். ஷிகர் தவான் 35 ரன்கள் எடுத்தார்.
அடுத்து ஜிதேஷ் சர்மா அதிரடியாக விளையாடி 11 பந்துகளில் 23 ரன்கள் எடுத்து அவுட் ஆனார்.

குஜராத் சார்பில் ரஷித் கான் 3 விக்கெட்டும், நல்கண்டே 2 விக்கெட்டும் கைப்பற்றினர்.

இதையடுத்து, 190 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் குஜராத் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் மேத்யூ வேட் 7 ரன்னில் அவுட்டானார்.

மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் ஷுப்மான் கில் பஞ்சாப் பந்து வீச்சை நாலாபுறமும் பறக்கவிட்டார். சிக்சர், பவுண்டரிகளாக விளாசினார்.

சாய் சுதர்சனுடன் சேர்ந்து 2வது விக்கெட்டுக்கு 101 ரன்கள் சேர்த்தார் ஷுப்மான் கில். ஷுப்மான் கில் 59 பந்துகளில் ஒரு சிக்சர், 11 பவுண்டரி உள்பட 96 ரன்கள் எடுத்து வெளியேறினார். பாண்ட்யா 28 ரன்னில் அவுட்டானார்.

கடைசி 2 பந்தில் 12 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், ராகுல் திவாட்டியா 2 சிக்சர்களை விளாசி அணியை வெற்றி பெறச்செய்தார்.

இறுதியில், குஜராத் அணி 4 விக்கெட் இழப்புக்கு 190 ரன்களை எடுத்து திரில் வெற்றி பெற்றது. குஜராத் அணி பெறும் 3வது வெற்றி இதுவாகும்.
Tags:    

Similar News