விளையாட்டு
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி வீரர்கள்

ஐபிஎல் கிரிக்கெட்- 12 ரன்கள் வித்தியாசத்தில் ஐதராபாத்தை வீழ்த்தி லக்னோ அணி வெற்றி

Published On 2022-04-04 23:34 IST   |   Update On 2022-04-05 06:17:00 IST
கேப்டன் கே.எல்.ராகுல் 68 ரன்கள் குவித்ததால் லக்னோ அணி கவுரவமான ஸ்கோரை எட்டியது
மும்பை:

ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 12வது லீக் ஆட்டம் மும்பை டி.ஒய்.பாட்டீல் ஸ்டேடியத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ், சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் விளையாடின. 

டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி, பந்துவீச்சை தேர்வு செய்தது. 

இதையடுத்து முதலில் களம் இறங்கிய லக்னோ அணியில் துவக்க வீரர் கேப்டன் கே.எல்.ராகுல், 68 ரன்கள் குவித்தார். தீபக் ஹூடா 51 ரன்கள் அடித்தார்.  

லக்னோ அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 169 ரன்கள் சேர்த்தது. 
சன்ரைசர்ஸ் தரப்பில் வாஷிங்டன் சுந்தர், ரொமாரியோ ஷெப்பர்டு, நடராஜன் தலா 2 விக்கெட் எடுத்தனர். 

இதையடுத்து 170 ரன்கள் எடுத்தால் இலக்கை நோக்கி விளையாடிய சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 157 ரன்கள் அடித்தது. 

அதிசபட்சமாக அந்த அணியின் ராகுல் திரிபாதி 44 ரன்களும், நிகோலஸ் பூரன் 34 ரன்களும் எடுத்தனர். இதையடுத்து 12 ரன்கள் வித்தியாசத்தில் லக்னோ அணி வெற்றி பெற்றது. 

லக்னோ அணி சார்பில் அவேஸ்கான் 4 விக்கெட்களும், ஹோல்டர் 3 விக்கெட்களும், பாண்ட்யா 2 விக்கெட்களும் வீழ்த்தினர்.

Similar News