விளையாட்டு
ரவீந்திர ஜடேஜா

தோல்வியில் இருந்து மீண்டும் வருவதற்கு எங்களால் முடிந்த அனைத்தையும் செய்வோம்- ரவீந்திர ஜடேஜா உறுதி

Published On 2022-04-04 04:23 IST   |   Update On 2022-04-04 05:21:00 IST
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் தோல்வி அடைந்ததன் மூலம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஹாட்ரிக் தோல்வியை சந்தித்துள்ளது.
மும்பை:

பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டி நிறைவுக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன்  ரவீந்திர ஜடேஜா, பவர்பிளேயில் அதிக விக்கெட்டுகளை இழந்தோம் என்றும், தோல்வியில் இருந்து மீண்டு வருவதற்கான வழியை கண்டு பிடிக்க வேண்டும் என்றும் தெரிவித்தார். 

ருதுராஜ் கெய்க்வாட் சிறந்த வீரர் என்றும், அவருக்கு நம்பிக்கை அளித்தால் சிறப்பாக செயல்படுவார் என்றும் கூறினார். 

சிவம் துபே சிறப்பாக பேட்டிங் செய்கிறார், அவரை சிறந்த மனநிலையில் வைத்திருக்க வேண்டியது முக்கியம் என்று தாம் நினைப்பதாகவும் அவர் தெரிவித்தார். 

தோல்வியில் இருந்து மீண்டும் வருவதற்கு எங்களால் முடிந்த அனைத்தையும் செய்வோம் என்றும் ஜடேஜா குறிப்பிட்டுள்ளார்.

Similar News