விளையாட்டு
சதமடித்த அலீசா ஹீலி

அலீசா ஹீலி அதிரடி ஆட்டம் - இங்கிலாந்து வெற்றி பெற 357 ரன்களை இலக்காக நிர்ணயித்தது ஆஸ்திரேலியா

Published On 2022-04-03 10:14 IST   |   Update On 2022-04-03 10:14:00 IST
ஆஸ்திரேலியாவின் அலிசா ஹீலி முதல் மற்றும் 2-வது விக்கெட்டுக்கு 150க்கும் மேற்பட்ட ரன்கள் ஜோடி சேர்த்து அசத்தினார்.
கிறிஸ்ட்சர்ச்:

கிறிஸ்ட்சர்ச்சில் நடைபெற்று வரும் உலகக் கோப்பை மகளிர் கிரிக்கெட்டின் இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து அணிகள் மோதுகின்றன. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

அதன்படி, முதலில் பேட் செய்த ஆஸ்திரேலியா நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 356 ரன்கள் குவித்தது. அந்த அணியின் தொடக்க வீராங்கனைகளான அலீசா ஹீலியும், ஹெய்னசும் சிறப்பாக ஆடினர்.

ஹெய்ன்ஸ் 68 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்து இறங்கிய பெத் மூனி அரை சதமடித்து 62 ரன்னில் ஆட்டமிழந்தார்.

மறுபுறம் தூணாக நின்று பொறுப்புடன் விளையாடிய அலீசா ஹீலி சதமடித்து அசத்தினார். அவர் 138 பந்தில் 26 பவுண்டரி உள்பட 170 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.

Similar News