விளையாட்டு
சதம் அடித்த பட்லர்

பட்லர் அதிரடி சதம் - மும்பைக்கு 194 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது ராஜஸ்தான்

Published On 2022-04-02 17:27 IST   |   Update On 2022-04-02 17:27:00 IST
மும்பை அணிக்கு எதிரான ஆட்டத்தில் ராஜஸ்தான் அணியின் அதிரடி ஆட்டக்காரர் பட்லர் ஐபிஎல் தொடரில் தனது 2-வது சதத்தை பதிவு செய்துள்ளார்.
ஐபிஎல் தொடரில் 9-வது லீக் ஆட்டத்தில் மும்பை ராஜஸ்தான் அணிகள் மோதுகின்றனர். டாஸ் வென்ற ரோகித் பந்து வீச்சை தேர்வு செய்தார். அதன்படி ராஜஸ்தான் ராயல்ஸ் அணியினர் களமிறங்கி ஆடினர். 2-வது ஓவரில் ஜேஸ்வால் 1 ரன்னில் ஆட்டமிழந்தார். மும்பை இந்தியன்ஸ் அணியின் 4-வது ஓவரை பாசில் தம்பி வீசினார். அந்த ஓவரில் 3 சிக்சர் மட்டும் 2 பவுண்டரிகளை விளாசினார் பட்லர். 

ராஜஸ்தான் அணி 48 ரன்கள் எடுத்திருந்த நிலையில் படிக்கல் 7 ரன்னில் வெளியேறினார். இதனையடுத்து பட்லருடன் சாம்சன் ஜோடி சேர்ந்து ஆடினார். இருவரும் மும்பை இந்தியன்ஸ் பந்து வீச்சை நாலாபுறமும் விளாசினார். சாம்சன் 30 ரன்கள் எடுத்திருந்த போது பொல்லார்ட் பந்து வீச்சில் அவுட் ஆனார். 

அடுத்து வந்த ஹெட்மயர் அவரது பங்குக்கு 3 சிக்சர் 3 பவுண்டரிகளை விளாசிய அவர் 35 ரன்கள் எடுத்திருந்த போது பும்ரா பந்தில் வெளியேறினார். ஒரு பக்கம் அதிரடியாக விளையாடிய பட்லர் ஐபிஎல்-ல் தனது 2-வது சதத்தை பதிவு செய்தார். அவர் 100 ரன்கள் எடுத்து பும்ரா பந்தில் போல்ட் ஆனார். 100 ரன்கள் அடித்ததன் மூலம் ஆரஞ்சு தொப்பியை பட்லர் தன்வசமாக்கினார்.

அடுத்த வந்த வீரர்கள் அஸ்வின் 1, சைனி 2, பராக் 5 ரன்கள் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழக்க 20 ஓவர் முடிவில் ராஜஸ்தான் அணி 8 விக்கெட்டுகளை இழந்து 193 ரன்கள் குவித்தது.

மும்பை அணி தரப்பில் பும்ரா, மில்ஸ் தலா 3 விக்கெட்டுகள் எடுத்தனர். 194 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மும்பை அணி களமிறங்கும்.

Similar News