விளையாட்டு
ராஜஸ்தான் ராயல்ஸ் அதிரடியை சமாளிக்குமா மும்பை இந்தியன்ஸ்? இன்று பலப்பரீட்சை
ஐபிஎல் கிரிக்கெடில் இன்று நடக்கும் மற்றொரு ஆட்டத்தில் ஹர்திக் பாண்ட்யா தலைமையிலான குஜராத் டைடன்ஸ்- ரிஷப் பண்ட் தலைமையிலான டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் மோதுகின்றன.
மும்பை:
15-வது ஐ.பி.எல். போட்டி யில் நேற்றுடன் 8 ஆட்டங்கள் முடிந்துள்ளன.
இதில் கொல்கத்தா 2 வெற்றி, 1 தோல்வியுடன் 4 புள்ளிகள் பெற்று முன்னிலையில் உள்ளது. ராஜஸ்தான், டெல்லி, குஜராத் ஆகிய அணிகள் முதல் ஆட்டத்தில் வெற்றி பெற்று 2 புள்ளி பெற்றுள்ளன. லக்னோ, பெங்களூர், பஞ்சாப் ஆகியவை ஒரு வெற்றி, ஒரு தோல்வியுடன் 2 புள்ளி பெற்றுள்ளன. சென்னை சூப்பர் கிங்ஸ் (2 போட்டி), மும்பை, ஐதராபாத் (தலா 1 ஆட்டம்) ஆகியவை புள்ளி எதுவும் பெறவில்லை.
8-வது நாளான இன்று 2 ஆட்டங்கள் நடக்கிறது. மும்பை டி.ஒய்.பட்டீல் மைதானத்தில் மாலை 3.30 மணிக்கு நடைபெறும் முதல் ஆட்டத்தில் ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ்- சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதுகின்றன.
மும்பை அணி தொடக்க ஆட்டத்தில் டெல்லியிடம் தோற்று இருந்தது. இதனால் ராஜஸ்தானை வீழ்த்தி முதல் வெற்றியை பெறும் ஆர்வத்தில் இருக்கிறது. அந்த அணியில் கேப்டன் ரோகித் சர்மா, இஷான் கிஷன், பும்ரா, போல்லார்ட், டைமல் மில்ஸ் போன்ற சிறந்த வீரர்கள் உள்ளனர்.
ராஜஸ்தான் அணி முதல் ஆட்டத்தில் ஐதராபாத்தை 61 ரன் வித்தியாசத்தில் தோற்கடித்தது. இதனால் மும்பையை வீழ்த்தி 2-வது வெற்றியை பெறும் ஆர்வத்தில் இருக்கிறது. அந்த அணியில் கேப்டன் சஞ்சு சாம்சன், படிக்கல், பட்லர், ஹெட்மயர், போல்ட், சாஹல், பிரசித் கிருஷ்ணா போன்ற சிறந்த வீரர்கள் உள்ளனர்.
இரவு 7.30 மணிக்கு புனேயில் நடைபெறும் 2-வது ஆட்டத்தில் ஹர்திக் பாண்ட்யா தலைமையிலான குஜராத் டைடன்ஸ்- ரிஷப் பண்ட் தலைமையிலான டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் மோதுகின்றன.
இரு அணிகளுமே தொடக்க ஆட்டத்தில் வெற்றி பெற்று இருந்தது. குஜராத் அணி லக்னோ சூப்பர் ஜெயன்ட்சை 5 விக்கெட் வித்தியாசத்திலும், டெல்லி அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் மும்பையும் தோற்கடித்தன. இதனால் 2-வது வெற்றியை பெறப்போவது யார்? என்று அவலுடன் எதிர்பார்க்கப் படுகிறது.
குஜராத் அணியில் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா, ராகுல் திவேதியா, ரஷீத்கான், முகமது ஷமி, பெர்குசன், டேவிட் மில்லர், மேத்யூ வேட் போன்ற சிறந்த வீரர்களும், டெல்லி அணியில் கேப்டன் ரிஷப் பண்ட், பிரித்வி ஷா, அக்ஷர் படேல், லலித்யாதவ், ஷர்துல் தாகூர் போன்ற சிறந்த வீரர்களும் உள்ளனர்.