விளையாட்டு
விக்கெட் வீழ்த்திய ஹார்மரை பாராட்டும் சக வீரர்கள்

சதத்தை தவறவிட்ட பவுமா - தென் ஆப்பிரிக்கா முதல் இன்னிங்சில் 367 ரன்களுக்கு ஆல் அவுட்

Published On 2022-04-02 08:11 IST   |   Update On 2022-04-02 08:11:00 IST
வங்காளதேசத்துக்கு எதிரான முதல் டெஸ்டில் தென் ஆப்பிரிக்காவின் பவுமா, டீன் எல்கர் ஆகியோர் அரை சதமடித்தனர்.
டர்பன்:

வங்காள தேச அணி தென் ஆப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.

இரு அணிகளுக்கான முதல் டெஸ்ட் டர்பனில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற வங்காளதேச அணி பந்துவீச்சை தேர்வுசெய்தது. 

அதன்படி, முதலில் பேட் செய்த தென் ஆப்பிரிக்க அணி முதல் இன்னிங்சில் 367 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. பவுமா 93 ரன்னும், எல்கர் 67 ரன்னும், சரல் எர்வீ 41 ரன்னும் எடுத்தனர்.

வங்காளதேசம் சார்பில் காலித் அகமது 4 விக்கெட்டும், மெஹிதி ஹசன் 3 விக்கெட்டும், எபாட் ஹொசைன் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

இதையடுத்து, வங்காளதேச அணி தனது முதல் இன்னிங்சில் களமிறங்கியது. முன்னணி வீரர்கள் விரைவில் அவுட்டாகினர்.

இரண்டாம் நாள் ஆட்ட முடிவில் வங்காளதேசம் 4 விக்கெட் இழப்புக்கு 98 ரன்கள் எடுத்துள்ளது. மஹ்முதுல் ஹசன் ஜாய் 44 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார். 

தென் ஆப்பிரிக்காவின் ஹார்மர் 4 விக்கெட் கைப்பற்றினார்.

Similar News