விளையாட்டு
சூப்பர் கிங்ஸ் அகாடமி சார்பில் கோடைகால கிரிக்கெட் பயிற்சி முகாம்- சென்னை, சேலத்தில் நடக்கிறது
சென்னையை அடுத்த துரைப்பாக்கத்தில் உள்ள சூப்பர் கிங்ஸ் அகாடமி மைதானம் மற்றும் சேலம் அருகே வாழப்பாடியில் உள்ள சேலம் கிரிக்கெட் பவுண்டேசன் மைதானம் ஆகியவற்றில் வருகிற 6-ந் தேதி தொடங்கி நடைபெறுகிறது.
சென்னை:
சென்னை சூப்பர் கிங்ஸ் சார்பில் உருவாக்கப்பட்டுள்ள சூப்பர் கிங்ஸ் அகாடமி சார்பில் கோடைகால கிரிக்கெட் பயிற்சி முகாம் சென்னையை அடுத்த துரைப்பாக்கத்தில் உள்ள சூப்பர் கிங்ஸ் அகாடமி மைதானம் மற்றும் சேலம் அருகே வாழப்பாடியில் உள்ள சேலம் கிரிக்கெட் பவுண்டேசன் மைதானம் ஆகியவற்றில் வருகிற 6-ந் தேதி தொடங்கி நடைபெறுகிறது.
இதில் 6 முதல் 23 வயதுக்கு உட்பட்ட இருபாலருக்கும் பயிற்சி அளிக்கப்பட இருக்கிறது. இந்த பயிற்சி முகாமில் கலந்து கொள்ள விரும்புபவர்கள் www.superkingsacademy.com என்ற இணையதள முகவரியில் பதிவு செய்யலாம் என்று சூப்பர் கிங்ஸ் அகாடமி சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.