விளையாட்டு
நெய்மர் - ஹசரங்கா

நெய்மர் பாணியில் மகிழ்ச்சியை வெளிப்படுத்திய ஆர்சிபி வீரர் ஹசரங்கா

Published On 2022-03-31 09:25 GMT   |   Update On 2022-03-31 10:01 GMT
கொல்கத்தா அணிக்கு எதிராக ஒவ்வோரு விக்கெட்டை வீழ்த்திய போது களத்தில் வித்தியாசமான முறையில் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியது குறித்து ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி வீரர் ஹசரங்கா விளக்கம் அளித்துள்ளார்.

கொல்கத்தா அணிக்கு எதிரான ஆட்டத்தில் பெங்களூர் அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் சிறப்பாக பந்து வீசிய இலங்கை சுழற்பந்து வீச்சாளர் ஹசரங்கா ஆட்டநாயகன் விருதை தட்டிச்சென்றார். இவர் 4 ஓவரில் 20 ரன்களை விட்டுக் கொடுத்து 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

ஹசரங்கா ஒவ்வோரு விக்கெட்டுகளை வீழ்த்திய போது புதுவிதமான முறையில் தனது கொண்டாட்டத்தை வெளிப்படுத்தினார். இது ரசிகர்களால் மிகவும் கவரப்பட்டது. 

கொண்டாட்டத்தை வெளிப்படுத்தும் முறை குறித்து ஹசரங்கா கூறியதாவது:-

நான் பிரேசில் மற்றும் பாரிஸ் செயின்ட்-ஜெர்மனி வீரர்களின் தீவிர ரசிகன். அவர்களது கொண்டாடும் விதத்தை அடிக்கடி பின்பற்றுவேன். எனக்கு மிகவும் பிடித்த கால்பந்து வீரர் நெய்மர். அவரது ஹேங் லூஸ் கொண்டாட்டத்தைதான் கொல்கத்தா அணிக்கு எதிராக நான் பின்பற்றினேன்.

போட்டியின் இக்கட்டான சூழ்நிலையில் 4 ரன்கள் மட்டுமே எடுத்தேன். பனி பொழிவில் சிறப்பாக பந்து வீசி 4 விக்கெட்டுகளை கைப்பற்றியது மகிழ்ச்சி அளிக்கிறது.



நான் விளையாடச் செல்லும்போது எந்த ஒரு அழுத்தமும் இல்லாமல் செல்வேன். அதனால்தான் நான் வெற்றி பெற்றதாக உணர்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News