விளையாட்டு
இங்கிலாந்து தொடக்க வீராங்கனை டேனி வியாட்

மகளிர் உலகக்கோப்பை போட்டியின் 2-வது அரை இறுதி: தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக இங்கிலாந்து 293 ரன் குவிப்பு

Published On 2022-03-31 06:22 GMT   |   Update On 2022-03-31 06:22 GMT
மகளிர் உலக்கோப்பை கிரிக்கெட் போட்டியின் 2-வது அரை இறுதி ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக இங்கிலாந்து தொடக்க வீராங்கனை டேனி வியாட் சதம் அடித்து அசத்தினார்.
கிறிஸ்டசர்ச்:

12-வது மகளிர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி நியூசிலாந்தில் நடை பெற்று வருகிறது.

இதன் அரை இறுதிக்கு ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா, இங்கி லாந்து, வெஸ்ட்இண்டீஸ் ஆகியவை தகுதி பெற்று இருந்தன. இந்தியா, நியூசிலாந்து, வங்காளதேசம், பாகிஸ்தான் அணிகள் வெளியேற்றப்பட்டன. நேற்று நடந்த முதல் அரை இறுதி ஆட்டத்தில் ஆஸ்திரேலியா 157 ரன் வித்தியாசத்தில் வெஸ்ட்இண்டீசை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது.

2-வது அரை இறுதி ஆட்டம் கிறிஸ்ட்சர்ச் மைதானத்தில் இன்று நடந்தது. இதில் இங்கிலாந்து- தென்ஆப்பிரிக்கா அணிகள் மோதின.

தென்ஆப்பிரிக்கா ‘டாஸ்’ வென்று பந்து வீச்சை தேர்வு செய்தது. முதலில் விளையாடிய இங்கிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 293 ரன் குவித்தது.

தொடக்க வீராங்கனை டேனி வியாட் சதம் அடித்தார். 92-வது போட்டியில் விளையாடும் அவருக்கு இது 2-வது செஞ்சுரியாகும். டேனிவியாட் 129 ரன்னும், ஷோபியா துங்லே 60 ரன்னும் எடுத்தனர். ‌ஷப்னம் இஸ்மாயில் 3 விக்கெட்டும், மாரிஹன் காப், மசாபாத கிளாஸ் தலா 2 விக்கெட்டும் வழங்கினார்கள்.

294 ரன் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் தென்ஆப்பிரிக்கா விளையாடி வருகிறது.
Tags:    

Similar News