விளையாட்டு
அலிஷா ஹீலி

மகளிர் உலகக்கோப்பை அரைஇறுதி: வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக ஆஸ்திரேலியா 305 ரன்கள் குவிப்பு

Published On 2022-03-30 11:05 IST   |   Update On 2022-03-30 11:05:00 IST
மகளிர் உலகக்கோப்பை அரைஇறுதி போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக ஆஸ்திரேலியா தொடக்க வீராங்கனை அலிஷா ஹீலி சதம் அடித்தார்.
வெலிங்டன்:

12-வது மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி நியூசிலாந்தில் நடைபெற்று வருகிறது. இதன் ‘லீக்‘ முடி வில் ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து, வெஸ்ட்இண்டீஸ் அணிகள் முறையே முதல் 4 இடங்களை பிடித்து அரை இறுதிக்கு தகுதி பெற்றன. இந்தியா, நியூசிலாந்து, வங்காளதேசம், பாகிஸ்தான் அணிகள் முறையே 5 முதல் 8-வது இடங்களை பிடித்து வெளியேறின.

2 நாள் ஓய்வுக்கு பிறகு முதல் அரை இறுதி ஆட்டம் வெலிங்டனில் இன்று நடந்தது.

இதில் 7 முறை சாம்பியனான ஆஸ்திரேலியா- வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதின. மழையால் ஆட்டம் 45 ஓவர்களாக குறைக்கப்பட்டது.

‘டாஸ்’ வென்ற வெஸ்ட் இண்டீஸ் பந்து வீச்சை தேர்வு செய்தது. முதலில் விளையாடிய ஆஸ்திரேலிய அணி 45 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 305 ரன் குவித்தது.

தொடக்க வீராங்கனை அலிஷா ஹீலி சதம் அடித்தார். 93-வது போட்டியில் விளையாடும் அவருக்கு இது 4-வது சதமாகும். அலிஷா ஹீலி 107 பந்தில் 129 ரன்னும் (17 பவுண்டரி, 1 சிக்சர்), மற்றொரு தொடக்க வீராங்கனை ராச்செல் கொய்னெஸ் 85 ரன்னும், மூனி 43 ரன்னும் எடுத்தனர்.

45 ஓவரில் 306 ரன் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் வெஸ்ட் இண்டீஸ் களம் இறங்கியது.

Similar News