விளையாட்டு
பதோனி - கவுதம் கம்பீர்

கவுதம் கம்பீருக்கு நன்றி தெரிவித்த ஆயுஷ் பதோனி

Published On 2022-03-29 09:56 GMT   |   Update On 2022-03-29 09:56 GMT
ஐபிஎல் ஏலத்தில் 3 வருடங்கள் ஏலம் போகாத நிலையில் ஏலம் எடுத்த லக்னோ அணிக்கு நன்றி உள்ளவனான இருப்பேன் என இளம் வீரர் பதோனி தெரிவித்துள்ளார்.
குஜராத் டைடன்ஸ் அணிக்கு எதிரான நேற்றைய ஆட்டத்தில் 41 பந்துகளில் 54 ரன்கள் எடுத்த இளம் வீரர் பதோனி தனக்கு ஆதரவளித்த கவுதம் காம்பீருக்கு நன்றி தெரிவித்தார்.

இது குறித்து பதோனி கூறியதாவது:-

கம்பீர் எனக்கு நிறைய ஆதரவளித்தார். எனது இயல்பான விளையாட்டை விளையாடுமாறும் நீங்கள் நல்ல ஸ்கோரை எடுப்பீர்கள் எனவும் அவர் கூறியதாக போட்டி முடிந்த பிறகு நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் தெரிவித்தார். 

மேலும் அவர் என்னிடம் சூழ்நிலைக்கு ஏற்ப விளையாட வேண்டியதில்லை. அதற்கு மூத்த வீரர்கள் இருக்கிறார்கள். அதனால் உங்கள் இயல்பான ஆட்டத்தை வெளிப்படுத்துமாறு கூறினார்.

3 ஆண்டுகளாக இவரை எந்த அணியும் ஏலம் எடுக்காத நிலையில் தற்போது தொடக்க விலையான 20 லட்சத்திற்கு லக்னோ அணி பதோனியை ஏலம் எடுத்தது. 

நான் இரண்டு முதல் மூன்று அணிகளுக்கான சோதனைகளுக்குச் சென்றுள்ளேன், ஆனால் இறுதியில் யாரும் என்னை ஏலத்தில் எடுக்கவில்லை. எனவே, என்னை எடுத்ததற்காக லக்னோவுக்கு நான் நன்றியுள்ளவனாக இருப்பேன் என்று பதோனி கூறினார். 

கடந்த மூன்று வருடங்கள் போராட்டமாகத்தான் இருந்தது. டெல்லி அணியிலும் எனக்கு அதிக வாய்ப்புகள் கிடைக்கவில்லை. ஒரே ஒரு சீசனில் மட்டுமே விளையாடி ஒரே ஒரு முறை பேட்டிங் செய்தேன். எனது ஆட்டத்தை மேம்படுத்தியுள்ளேன். நான் அதிக ஷாட்களை பழகி ஆடி வருகிறேன். இது எனக்கு மிகவும் உதவியது என்று அவர் கூறினார்.

Tags:    

Similar News