விளையாட்டு
மியாமி ஓபன் டென்னிஸ்: ரோகன் போபண்ணா ஜோடி கால்இறுதிக்கு தகுதி
மியாமி ஓபன் டென்னிஸ் போட்டியில் ஆண்கள் இரட்டையர் பிரிவின் 2-வது சுற்று ஆட்டம் ஒன்றில் ரோகன் போபண்ணா-டெனிஸ் ஷபோவலோவ் ஜோடி வெற்றி பெற்று கால்இறுதிக்கு முன்னேறியது.
மியாமி:
மியாமி ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி அமெரிக்காவில் நடந்து வருகிறது. இதில் ஆண்கள் இரட்டையர் பிரிவின் 2-வது சுற்று ஆட்டம் ஒன்றில் ரோகன் போபண்ணா (இந்தியா)-டெனிஸ் ஷபோவலோவ் (கனடா) ஜோடி 6-3, 7-6 (7-3) என்ற நேர்செட்டில் முதல் நிலை இணையான குரோஷியாவின் மேட் பாவிக்-நிகோலா மெக்டிக்கை வீழ்த்தி கால்இறுதிக்கு முன்னேறியது.
இதையும் படியுங்கள்...எதிர்காலத்தில் அபினவ் மனோகர் குறித்து ரசிகர்கள் பேசுவார்கள்- ஹர்திக் பாண்ட்யா பேட்டி