விளையாட்டு
ஹர்திக் பாண்ட்யா, அபினவ் மனோகர்

எதிர்காலத்தில் அபினவ் மனோகர் குறித்து ரசிகர்கள் பேசுவார்கள்- ஹர்திக் பாண்ட்யா பேட்டி

Published On 2022-03-29 08:42 IST   |   Update On 2022-03-29 08:42:00 IST
ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற லக்னோ அணிக்கு எதிரான ஆட்டத்தில் 5 விக்கெட் வித்தியாசத்தில் குஜராத் அணி வெற்றி பெற்றது.
மும்பை:

லக்னோ அணிக்கு எதிரான நேற்றைய ஆட்டத்தில் கடைசி ஓவரில் குஜராத் அணிக்கு 11 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், அபினவ் மனோகர், அவேஷ்கானின் பந்துகளில் அடுத்தடுத்து பவுண்டரிகளை அடித்து தனது அணியின் வெற்றியை எளிதாக்கினார்.  

போட்டி நிறைவுக்கு பின்னர் இது குறித்த குஜராத் அணி கேப்டன் ஹர்திக் பாண்ட்யா செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் தெரிவித்துள்ளதாவது:

எதிர்காலத்தில் அபினவ் மனோகரைப் பற்றி நீங்கள் நிறைய கேள்விப்படுவீர்கள். அவரது திறமை குறித்து மற்றவர்கள் அறிந்து கொள்ள வேண்டிய ஒருவர். ராகுல் தெவாடியாவும் உணர்வுபூர்வமானவர். 

பெரும்பாலும் நான் நான்காவது இடத்தில் பேட்டிங் செய்வேன், ஏனென்றால் மற்றவர்கள் சுதந்திரமாக விளையாடுவதற்காக, அழுத்தமான சூழலுக்கு எனது அனுபவத்தை பயன்படுத்துவேன். 

நாங்கள் ஒரு அணியாக இணைந்து வெற்றி பெற விரும்புகிறோம், யாரும் மற்றவர் பங்களிப்பை பறிக்க முடியாது. இது சரியான ஆட்டம். வெற்றியின் மூலம் நிறைய கற்றுக் கொண்டோம். 

ஷமி புதிய பந்தை சிறப்பாக பயன்படுத்தினார். அவர் எங்களை ஒரு சிறந்த தொடக்கத்திற்கு கொண்டு வந்தார்.  இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Similar News