விளையாட்டு
மிதாலிராஜ்

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக இந்தியா 274 ரன் குவித்தது

Published On 2022-03-27 05:47 GMT   |   Update On 2022-03-27 06:11 GMT
மிதாலிராஜ் தலைமையிலான இந்திய அணி கடைசி ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்காவை இன்று எதிர்கொண்டது. அரை இறுதியில் நுழைய இதில் வெற்றிபெற வேண்டிய கட்டாயம் இந்தியாவுக்கு இருந்தது.

கிறிஸ்ட்சர்ச்:

12-வது மகளிர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி நியூசிலாந்தில் நடைபெற்று வருகிறது.

8 அணிகள் பங்கேற்ற இந்தப் போட்டியில் ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா அரை இறுதிக்கு முன்னேறின. எஞ்சிய 2 அணிகள் எவை என்பது இன்றைய கடைசி நாள் ஆட்டத்தின் முடிவில் தெரியவரும்.

மிதாலிராஜ் தலைமையிலான இந்திய அணி கடைசி ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்காவை இன்று எதிர்கொண்டது. அரை இறுதியில் நுழைய இதில் வெற்றிபெற வேண்டிய கட்டாயம் இந்தியாவுக்கு இருந்தது.

‘டாஸ்’ வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 274 ரன் குவித்தது.

தொடக்க வீராங்கனை மந்தனா 71 ரன்னும், கேப் டன் மிதாலிராஜ் 68 ரன்னும், ‌ஷபாலி வர்மா 53 ரன்னும், ஹர்மன் பிரீத் கவுர் 48 ரன்னும் எடுத்தனர்.

275 ரன் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் தென்ஆப்பிரிக்கா ஆடியது.

மற்றொரு ஆட்டத்தில் இங்கிலாந்து- வங்காளதேசம் மோதின. முதலில் விளையாடிய இங்கிலாந்து அணி 6 விக்கெட் இழப்புக்கு 234 ரன் எடுத்தது.

பின்னர் ஆடிய வங்காள தேசம் 134 ரன்னில் சுருண்டது. இதனால் இங்கிலாந்து 100 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. அந்த அணி 8 புள்ளியுடன் 3-வது இடத்துக்கு முன்னேறி உள்ளது.

நியூசிலாந்து, வங்காளதேசம், பாகிஸ்தான் அணிகள் ஏற்கனவே வாய்ப்பை இழந்து விட்டன.

Tags:    

Similar News