விளையாட்டு
பிராத்வெயிட்

இங்கிலாந்து- வெஸ்ட் இண்டீஸ் இரண்டாவது டெஸ்ட் டிராவில் முடிகிறது

Published On 2022-03-20 19:19 IST   |   Update On 2022-03-20 19:19:00 IST
இங்கிலாக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி கேப்டன் பிராத்வெயிட் 160 ரன் குவித்தார்.
பிரிட்ஜ் டவுன்:

வெஸ்ட் இண்டீஸ் -இங்கிலாந்து அணிகள் மோதும் 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி பிரிட்ஜ் டவுனில் நடைபெற்று வருகிறது. இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 9 விக்கெட் இழப்புக்கு 507 ரன் குவித்து டிக்ளேர் செய்தது. பின்னர் முதல் இன்னிங்சை விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் 3-வது நாள் ஆட் டத்தின் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 288 ரன் எடுத்து இருந்தது. கேப்டன் பிராத்வெயிட் , பிளாக்வுட் சதம் அடித்தனர்.

நேற்று 4-வது நாள் ஆட்டம் நடந்தது. 219 ரன்கள் பின்தங்கி, கைவசம் 6 விக்கெட் என்ற நிலையில் வெஸ்ட் இண்டீஸ் தொடர்ந்து ஆடியது. அந்த அணி 187.5 ஓவர்களில் 411 ரன் குவித்து ஆல் அவுட் ஆனது. இது இங்கிலாந்து ஸ்கோரை விட 96 ரன் குறைவாகும்.

கேப்டன் பிராத்வெயிட் 160 எடுத்து ஆட்டம் இழந்தார். இங்கிலாந்து தரப்பில் ஜேக் லீச் 3 விக்கெட்டும், பென் ஸ்டோக்ஸ், ‌ஷகீப் மக்மூது தலா 2 விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.

96 ரன்கள் முன்னிலையில் 2-வது இன்னிங்சை ஆடிய இங்கிலாந்து நேற்றைய ஆட்ட நேர முடிவில் விக்கெட் இழப்பின்றி 40 ரன் எடுத்து இருந்தது.  இன்று கடைசி நாள் ஆட்டம் நடக்கிறது. இங்கிலாந்து 136 ரன்கள் முன்னிலையில் உள்ளது. கைவசம் 10 விக்கெட் இருக்கிறது. எனவே, முதல் டெஸ்டை போலவே இந்த டெஸ்டும் டிராவில் முடிய அதிகமான வாய்ப்பு உள்ளது.

Similar News