விளையாட்டு
கோப்பு படம்

பிரிட்ஜ்டவுன் டெஸ்ட்: வெஸ்ட் இண்டீஸ் முதல் இன்னிங்ஸில் 411 ரன்களுக்கு ஆல்அவுட்

Published On 2022-03-20 04:05 IST   |   Update On 2022-03-20 04:05:00 IST
நான்காம் நாள் ஆட்ட நேர முடிவில் இங்கிலாந்து அணி 136 ரன்கள் கூடுதலாக பெற்று வலுவான நிலையில் உள்ளது.
பிரிட்ஜ்டவுன்:

இங்கிலாந்து கிரிக்கெட் அணி, வெஸ்ட் இண்டீசில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையே 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. 

ஆன்டிகுவாவில் நடந்த முதல் போட்டி டிராவில் முடிந்தது. பிரிட்ஜ் டவுனில் நடைபெற்று வரும் 2-வது டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்தது. 

முதல் இன்னிங்ஸில் அந்த அணி 9 விக்கெட் இழப்பிற்கு 507 ரன்கள் குவித்த நிலையில், டிக்ளேர் செய்தது. இதையடுத்து களம் இறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி 2ம் நாள் ஆட்ட நேர முடிவில்  ஒரு விக்கெட் இழப்பிற்கு 71 ரன்கள் எடுத்திருந்தது. 

3ம் நாள் ஆட்டத்தின்போது வெஸ்ட் இண்டீஸ் தொடக்க ஆட்டக்காரரான கேப்டன் பிராத்வெயிட் மற்றும் ஜெர்மைன் பிளாக்வுட் ஆகியோரின் சதம் அடித்தனர். நான்காம் நாள் ஆட்டத்தில்  கேப்டன் பிராத்வெயிட் 160 ரன்கள் குவித்த நிலையில் ஆட்டமிழந்தார். 

வெஸ்ட் இண்டீஸ் அணி முதல் இன்னிங்ஸில் 411 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதையடுத்து தனது 2வது இன்னிங்ஸை தொடங்கிய இங்கிலாந்து 4 ஆம் நாள் ஆட்ட நேர முடிவில் விக்கெட் இழப்பின்றி 40 ரன்கள் எடுத்துள்ளது. இதன் மூலம் அந்த அணி 136 ரன்கள் கூடுதலாக பெற்று வலுவான நிலையில் உள்ளது. 

Similar News