விளையாட்டு
ஸ்மிருதி மந்தனா-ஹர்மன்பிரீத் கவுர்

மகளிர் உலகக்கோப்பையில் சாதனை படைத்த ஸ்மிருதி மந்தனா-ஹர்மன்பிரீத் கவுர் ஜோடி

Published On 2022-03-12 13:08 IST   |   Update On 2022-03-12 13:08:00 IST
சர்வதேச அளவில் பெண்கள் உலகக்கோப்பை போட்டிகளில் 4-வது விக்கெட்டுக்கு அதிக ரன்கள் எடுத்து ஸ்மிருதி மந்தனா-ஹர்மன்பிரீத் கவுர் ஜோடி சாதனை படைத்துள்ளது.
மகளிர் உலக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இன்று மோதி வருகிறது. இந்த போட்டியில் ஸ்மிருதி மந்தனா மற்றும் ஹர்மன்பிரீத் கவுர் சதம் அடித்தனர். ஸ்மிருதி மந்தனா 123 ரன்னிலும் ஹர்மன்பிரீத் கவுர் 109 ரன்னில் ஆட்டமிழந்தனர்.

இந்த ஜோடி 4 விக்கெட்டுக்கு 184 ரன்கள் சேர்த்தது. இதன் மூலம் உலக்கோப்பை கிரிக்கெட் வரலாற்றில் அதிக ரன்கள் எடுத்த இந்திய வீராங்கனைகள் என்ற சாதனையை ஸ்மிருதி மந்தனா-ஹர்மன்பிரீத் கவுர் ஜோடி பிடித்தது. இதற்கு முன்பு 2013-ம் ஆண்டு வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக திருஷ் காமினி-புனம் ரவுத் ஜோடி முதல் விக்கெட்டுக்கு 175 ரன்கள் எடுத்ததே அதிகப்பட்சமாக இருந்தது. இந்த சாதனையை ஸ்மிருதி மந்தனா-ஹர்மன்பிரீத் கவுர் ஜோடி முறியடித்தது.

பெண்கள் ஒருநாள் போட்டியில் 4-வது விக்கெட்டுக்கு இந்திய அளவில் அதிக ரன்கள் எடுத்த ஜோடி இதுவாகும். இதற்கு முன்பு 2017-ம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ஹர்மன்பிரீத் கவுர்-தீப்தி சர்மா ஜோடி 4-வது விக்கெட்டுக்கு 137 ரன்கள் எடுத்ததே சிறந்தது. 

மேலும் சர்வதேச அளவில் பெண்கள் உலகக்கோப்பை போட்டிகளில் 4-வது விக்கெட்டுக்கு அதிக ரன்கள் எடுத்த ஜோடி என்ற சாதனையையும் ஸ்மிருதி மந்தனா-ஹர்மன்பிரீத் கவுர் படைத்துள்ளது.

Similar News