விளையாட்டு
185 ரன்னில் அவுட்டான அசார் அலி

இமாம் உல் ஹக், அசார் அலி அபார சதம் - பாகிஸ்தான் முதல் இன்னிங்சில் 474 ரன்கள் குவிப்பு

Published On 2022-03-05 21:59 GMT   |   Update On 2022-03-05 21:59 GMT
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் பாகிஸ்தானின் இமாம் உல் ஹக், அசார் அலி ஜோடி 208 ரன்களை சேர்த்துள்ளது.
ராவல்பிண்டி:

ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணி பாகிஸ்தான் மண்ணில் சுற்றுப்பயணம் செய்து 3 டெஸ்ட் போட்டிகள், 3 ஒருநாள் போட்டி மற்றும் ஒரு 20 போட்டி கொண்ட தொடரில் விளையாடுகிறது.

இரு அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி ராவல்பிண்டியில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி கேப்டன் பாபர் அசாம் பேட்டிங் தேர்வு செய்தார்.

அதன்படி, பாகிஸ்தான் அணியின் தொடக்க வீரர்களாக அப்துல்லா, இமாம் உல்  ஹக் களமிறங்கினர். சிறப்பாக ஆடிய இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 105 ரன்களை சேர்த்தது. அப்துல்லா 44 ரன்களில் அவுட்டானார்.

அவரை தொடர்ந்து இமாம் உல்  ஹக் உடன் அசார் அலி ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி அசத்தலாக விளையாடியது. இமாம் உல்  ஹக் சதமடித்து அசத்தினார். அவர் 157 ரன்னில் வெளியேறினார்.

அதன்பின், அசார் அலியுடன் பாபர் அசாம் இணைந்தார். இந்த ஜோடியும் 100 ரன்களை சேர்த்த நிலையில், பாபர் அசாம் 36 ரன்னில் ஆட்டமிழந்தார். சிறப்பாக ஆடிய அசார் அலி 185 ரன்னில் அவுட்டானார். 

இறுதியில், பாகிஸ்தான் அணி 4 விக்கெட் இழப்புக்கு 474 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. முகமது ரிஸ்வான் 29 ரன்னுடனும், இப்திகார் அகமது 13 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர். இதையடுத்து, ஆஸ்திரேலியா அணி முதல் இன்னிங்சை விளையாடி வருகிறது.
Tags:    

Similar News