விளையாட்டு
ரோகித் சர்மா

ரோகித் சர்மா இந்தியாவின் நம்பர் ஒன் கிரிக்கெட்டர்: தேர்வுக்குழு தலைவர் சொல்கிறார்

Published On 2022-02-20 06:13 GMT   |   Update On 2022-02-20 06:13 GMT
இந்திய டெஸ்ட் அணி கேப்டனாக நியமனம் செய்யப்பட்டுள்ள ரோகித் சர்மா, இந்தியாவின் நம்பர் ஒன் கிரிக்கெட் என சேத்தன் சர்மா தெரிவித்துள்ளார்.
இந்திய ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட் அணியின் கேப்டனாக ஏற்கனவே ரோகித் சர்மா நியமிக்கப்பட்டுள்ளார். தென்ஆப்பிரிக்காவுக்க எதிரான தொடரை இந்தியா 1-2 என இழந்ததால், விராட் கோலி கேப்டன் பதவியை ராஜினாமா செய்தார்.

இதனால், இந்திய டெஸ்ட் அணிக்கு புதிய கேப்டனை நியமிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. ரோகித் சர்மா, கே.எல். ராகுல், ரிஷாப் பண்ட் பெயர்கள் அடிபட்டது. இந்த நிலையில் இலங்கைக்கு எதிராக டெஸ்ட் கிரிக்கெட் அணி நேற்று அறிவிக்கப்பட்டது.

ரோகித் சர்மா கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். இதனால் மூன்று வகை கிரிக்கெட் அணியின் கேப்டன் பதவியையும் ரோகித் சர்மா ஏற்றுள்ளார்.



இந்த நிலையில் ரோகித் சர்மா இந்தியாவின் நம்பர் ஒன் கிரிக்கெட்டர் என பிசிசிஐ தேர்வுக்குழுவின் தலைவர் சேத்தன் சர்மா தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து சேத்தன் சர்மா கூறுகையில் ‘‘ரோகித் சர்மா இந்தியாவின் நம்பர் ஒன் கிரிக்கெட்டர். முக்கியமான விசயம் என்னவென்றால், அவர் மூன்று வகையான கிரிக்கெட்டிலும் விளையாடி வருவதுதான். நாங்கள் அவரை எவ்வாறு மேனேஜ் செய்யப் போகிறோம் என்பதும் முக்கியமானது.

எல்லா கிரிக்கெட் வீரர்களும் தொழில்முறை வீரர்கள். அவர்களுக்கு அவர்களுடைய உடல்நிலை, உடல்நிலையை நிர்வகிப்பது தெரியும்.

ரோகித் சர்மா முற்றிலும் உடல் தகுதியுடன் உள்ளார். அதில் எந்த பிரச்சினையும் இருக்காது’’ என்றார்.

Tags:    

Similar News