விளையாட்டு
அவேஷ் கான்

ஐ.பி.எல். வரலாற்றை தகர்த்தெறிந்த அவேஷ் கான்

Published On 2022-02-13 07:56 IST   |   Update On 2022-02-13 07:56:00 IST
லக்னோ சூப்பர் ஜெயண்ட் அணி அவேஷ் கானை 10 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுத்ததன் மூலம், சர்வதேச விளையாட்டில் விளையாடாமல் அதிக தொகைக்கு ஏலம் போன வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.
ஐ.பி.எல். போட்டியில் கடந்த முறை டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்காக விளையாடியவர் அவேஷ் கான். ரபடா, நோர்ஜோ ஆகியோருடன் இணைந்து தனது சிறப்பான பந்து வீச்சை வெளிப்படுத்தினார். 140 கி.மீட்டருக்கும் அதிகமான வேகத்தில் பந்து வீச்சு முன்னணி பேட்ஸ்களை திணறடித்தார்.

இதன்மூலம் நேற்று நடைபெற்ற ஏலத்தில் அவரை எடுக்க பல அணிகள் போட்டியிட்டன. அடிப்படை விலையான 20 லட்சத்தில் இருந்து கிடுகிடுவென உயர்ந்தது. லக்னோ அணி இவரை எடுக்க கடும் போட்டியிட்டது. இறுதியில் 10 கோடி ரூபாய் கொடுத்து எடுத்தது.

அவேஷ் கான் இதுவரை சர்வதேச போட்டியில் விளையாடாத வீரர். இதன்மூலம் சர்வதேச விளையாட்டில் விளையாடாமல் அதிக தொகைக்கு ஏலம் போனவர் என்ற சாதனையை படைத்துள்ளார்.

இதற்கு முன் கிருஷ்ணப்பா கவுதமை சென்னை சூப்பர் கிங்ஸ் கடந்த ஆண்டுக்கான ஏலத்தில் 9.25 கோடி ரூபாய்க்கு எடுத்தது. இதுவே அதிக தொகையாக இருந்தது. இதை தற்போது அவேஷ் கான் முறியடித்துள்ளார்.

Similar News