விளையாட்டு
தமிழ் தலைவாஸ் , தபாங் டெல்லி கபடி அணி வீரர்கள்

புரோ கபடி லீக் - தமிழ் தலைவாஸை வீழ்த்தியது தபாங் டெல்லி

Published On 2022-02-13 01:11 IST   |   Update On 2022-02-13 01:11:00 IST
மற்றொரு ஆட்த்தில் பெங்கால் வாரியர்ஸை தோற்கடித்து யு மும்பா அணி வெற்றி பெற்றது.
பெங்களூரு:

8-வது புரோ கபடி லீக் போட்டிகள் பெங்களூருவில் நடைபெற்று வருகின்றன.
நேற்று இரவு நடைபெற்ற முதல் லீக் ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ் அணி, தபாங் டெல்லி அணியை எதிர்கொண்டது. இதில்  32-31 என்ற கணக்கில் தபாங் டெல்லி அணி வெற்றி பெற்றது.

இந்த வெற்றியின் மூலம் டெல்லி அணி லீக் புள்ளி பட்டியலில்  2வது இடத்துக்கு முன்னேறும் வாய்ப்பு அதிகரித்துள்ளது.



மற்றொரு ஆட்டத்தில்  யு மும்பா அணியும், பெங்கால் வாரியர்ஸ் அணியும் மோதின. இதில் 37-27 என்ற கணக்கில் யு மும்பா அணி நடப்பு சாம்பியனான பெங்கால் வாரியர்ஸ் அணியை வீழ்த்தியது. இந்த வெற்றியின் மூலம் மும்பை அணி பிளேஆஃப் சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பு  அதிகரித்துள்ளது.

Similar News