விளையாட்டு
ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்திய ஹோல்டர்

5வது டி20 போட்டி - ஹோல்டர் ஹாட்ரிக்கால் திரில் வெற்றி பெற்றது வெஸ்ட் இண்டீஸ்

Published On 2022-01-31 05:23 IST   |   Update On 2022-01-31 06:20:00 IST
இங்கிலாந்துக்கு எதிரான 5-வது டி20 போட்டியில் வெஸ்ட் இண்டீசின் ஹோல்டர் ஹாட்ரிக் உள்பட 5 விக்கெட் கைப்பற்றி ஆட்ட நாயகன் விருது பெற்றார்.
பார்படாஸ்:

வெஸ்ட்இண்டீஸ்- இங்கிலாந்து அணிகள் மோதிய 5-வது 20 ஓவர் போட்டி பார்படாசில் நடைபெற்றது. டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் முதலில் பேட்டிங் தேர்வு செய்தது.

அதன்படி, முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 179 ரன்கள் எடுத்தது. கேப்டன் பொல்லார்டு 25 பந்தில் 41 ரன்னும், பாவெல் 17 பந்தில் 35 ரன்னும்,பிராண்டன் கிங் 34 ரன்னும் எடுத்தனர். 

இங்கிலாந்து சார்பில் லிவிங்ஸ்டோன், அடில் ரஷித் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.
 
இதையடுத்து, 180 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து அணி களமிறங்கியது. 

இங்கிலாந்து அணி 162 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதனால் வெஸ்ட் இண்டீஸ் அணி 17 ரன்னில் வெற்றி பெற்றது. ஜேம்ஸ் வின்ஸ் அரை சதமடித்து 55 ரன்னில் அவுட்டானார்.

கடைசி கட்டத்தில் சாம் பில்லிங்ஸ் போராடினார். அவர் 28 பந்தில் 41 ரன் எடுத்து ஆட்டமிழந்தார். மற்ற வீரர்கள் நிலைத்து நிற்கவில்லை.

வெஸ்ட் இண்டீஸ் சார்பில் ஹோல்டர் 5 விக்கெட்டும், ஹொசைன் 4 விக்கெட்டும் கைப்பற்றினர்.

ஆட்ட நாயகன் மற்றும் தொடர் நாயகன் விருதை ஜேசன் ஹோல்டர் கைப்பற்றினார்.

இந்த வெற்றியின் மூலம் 5 போட்டி கொண்ட 20 ஓவர் தொடரை வெஸ்ட் இண்டீஸ் அணி 3 - 2 என கைப்பற்றி அசத்தியது. 

Similar News