விளையாட்டு
சதம் விளாசிய டி காக்

3-வது ஒருநாள் போட்டி - டி காக் சதம் விளாசினார்

Update: 2022-01-23 11:14 GMT
கேப் டவுனில் நடைபெறும் 3வது ஒருநாள் போட்டியில் தென் ஆப்பிரிக்காவின் டி காக் இந்தியாவுக்கு எதிராக 6-வது சதமடித்தார்.
கேப் டவுன்:

இந்தியா, தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி கேப் டவுனில் நடந்து வருகிறது. இதற்கான டாஸ் சுண்டப்பட்டதில் இந்திய அணி கேப்டன் கே.எல். ராகுல் டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்தார்.

இந்திய அணியில் ஜயந்த் யாதவ், சூர்யகுமார் யாதவ், பிரசித் கிருஷ்ணா, தீபக் சாஹர் ஆகிய 4 பேர் அணியில் இடம் பிடித்துள்ளனர். 
அஸ்வின், ஷர்துல் தாகூர், வெங்கடேஷ் அய்யர் நீக்கப்பட்டுள்ளனர்.

முதலில் பேட் செய்த தென் ஆப்பிரிக்கா மலானின் விக்கெட்டை விரைவில் பறிகொடுத்தது. மலான் ஒரு ரன்னிலும், பவுமா 8 ரன்னிலும், மார்கிரம் 15 ரன்னிலும் அவுட்டாகினர்.  அப்போது தென் ஆப்பிரிக்கா 3 விக்கெட்டுக்கு 70 ரன்கள் எடுத்திருந்தது.

ஒருபுறம் விக்கெட் வீழ்ந்தாலும் தொடக்க் ஆட்டக்காரர் டி காக் அதிரடியாக ஆடி சதம் விளாசினார். அவருக்கு வான் டெர் டுசன் நன்கு ஒத்துழைப்பு கொடுத்தார்.
Tags:    

Similar News