விளையாட்டு
முகமது ரிஸ்வான்

பாகிஸ்தானின் முகமது ரிஸ்வான் 2021-ன் சிறந்த டி20 கிரிக்கெட் வீரராக தேர்வு

Published On 2022-01-23 13:29 IST   |   Update On 2022-01-23 13:29:00 IST
ஐசிசி, பாகிஸ்தான் அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான முகமது ரிஸ்வானை 2021-ம் ஆண்டின் சிறந்த டி20 கிரிக்கெட் வீரராக தேர்வு செய்துள்ளது.
சர்வதேச கிரிக்கெட் கமிட்டி (ஐசிசி) ஒவ்வொரு வருடமும் சிறந்த டெஸ்ட், ஒருநாள், டி20 மற்றும் ஒட்டுமொத்தமாக சிறந்த கிரிக்கெட் வீரரை தேர்வு செய்து கவுரவிக்கும். அந்த வகையில் 20 கிரிக்கெட்டில் 2021-ம் ஆண்டின் சிறந்த வீரராக பாகிஸ்தான் விக்கெட் கீப்பர் கீப்பர் பேட்ஸ்மேன் முகமது ரிஸ்வானை தேர்ந்தெடுத்துள்ளது.

முகமது ரிஸ்வான் கடந்த ஆண்டு 29 டி20 கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி 1,326 ரன்கள் விளாசியுள்ளார். சராசரி 73.66 ஆகும். ஒரு சதம் அடித்துள்ளார். அத்துடன் 24 பேரை அவுட்டாக்கியுள்ளார்.

அவருக்கு 2021-ம் ஆண்டு மறக்க முடியாத ஆண்டாக அமைந்துள்ளது. ஐ.சி.சி. டி20 உலகக்கோப்பையில் பாகிஸ்தான் அணி அரையிறுதி வரை முன்னேறியது. இந்தத் தொடரில் அதிக ரன்கள் குவித்தவர்கள் பட்டியலில் 3-வது இடம் பிடித்தார்.

லாகூரில் தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக தனது முதல் சதத்தை பதிவு செய்த ரிஸ்வான், வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிராக 87 ரன்கள் விளாசினார்.

Similar News