விளையாட்டு
சிறப்பான தொடக்கம் கொடுத்த இந்திய ஜோடி

ஜூனியர் உலக கோப்பை கிரிக்கெட் - அயர்லாந்தை எளிதில் வீழ்த்தியது இந்தியா

Update: 2022-01-19 20:59 GMT
ஜூனியர் உலக கோப்பை கிரிக்கெட்டில் அயர்லாந்துக்கு எதிரான போட்டியில் இந்தியாவின் தொடக்க ஜோடி முதல் விக்கெட்டுக்கு 164 ரன்களை சேர்த்தது.
டிரினிடாட்:

ஜூனியர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டிகள் வெஸ்ட் இண்டீசில் நடைபெற்று வருகிறது.

நேற்று நடந்த குரூப் பி பிரிவில் இந்தியா, அயர்லாந்து அணிகள் மோதின. டாஸ் வென்ற அயர்லாந்து அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

அதன்படி, முதலில் பேட் செய்த இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 307 ரன்கள் குவித்தது. தொடக்க ஆட்டக்காரர்களான ரகுவன்ஷி, ஹர்னூர் சிங் பொறுப்புடன் ஆடி அரை சதமடித்தனர்.

ஹர்னூர் சிங் 88 ரன்னும், ரகுவன்ஷி 79 ரன்னும், ராஜ் பாவா 42 ரன்னும் எடுத்து அவுட்டாகினர். கடைசி கட்டத்தில் அதிரடியாக ஆடிய ராஜ்வர்தன் 17 பந்தில் 39 ரன் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

இதையடுத்து, 308 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் அயர்லாந்து அணி களமிறங்கியது. இந்திய அணியினரின் பந்துவீச்சில் சிக்கி விரைவில் விக்கெட்டுகளை பறிகொடுத்தது.

இறுதியில், அயர்லாந்து 133 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. அதிகபட்சமாக ஸ்காட் மெக்பத் 34 ரன்கள் எடுத்தார். இதன்மூலம் இந்தியா 174 ரன்கள் வித்தியாசத்தில் இரண்டாவது வெற்றியைப் பெற்றது. 

இந்தியா சார்பில் சங்வான், அனீஷ்வர் கவுதம், கவுஷல் தாம்பே ஆகியோர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

Tags:    

Similar News