விளையாட்டு
ஆஷிஷ் நெஹ்ரா

கோலியை யாரும் கேள்வி கேட்பதில்லை- ஆஷிஷ் நெஹ்ரா கருத்து

Published On 2022-01-04 09:47 GMT   |   Update On 2022-01-04 09:53 GMT
அனுபவமில்லாத வீரர்களை மிடில் ஆர்டரில் களமிறக்குவது எளிதான காரியமல்ல என ஆஷிஷ் நெஹ்ரா தெரிவித்தார்.
புதுடெல்லி:

இந்தியா டெஸ்ட் அணியில் இடம்பெற்றுள்ள ரஹானே, புஜாரா இருவரும் கடந்த சில போட்டிகளில் மிக சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து வருகின்றனர். 
தென் ஆப்ரிக்கா அணிக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்ஸின்போது புஜாரா 33 பந்துகளில் 3 ரன்கள் மட்டுமே எடுத்தார். ராஹானே ரன்கள் எதுவும் எடுக்காமல் டக் அவுட் ஆனார்.

இதனால் இருவரும் அணியில் நீடிக்க வேண்டுமா என பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் ஆஷிஷ் நெஹ்ரா, இருவரும் அணியில் நீடிக்க வேண்டும் என கூறியுள்ளார்.



இதுகுறித்து ஆஷிஷ் நெஹ்ரா கூறியதாவது:-

புஜாராவும், ரஹானேவும் கடந்த சில போட்டிகளில் சொதப்பி வருகின்றனர்.  ஆனால் மிடில் ஆர்டரில் களமிறங்கும் வீரர்களை மாற்றுவது எளிதான காரியமல்ல. அனுபவம் இல்லாத வீரர்களை அந்த இடத்தில் களமிறக்குவது சரியாக இருக்காது. புஜாரா, ரஹானே இருவரும் இந்த தொடர் முழுவதுமாவது ஆட வேண்டும். அதன்பின் என்ன செய்யலாம் என பிறகு யோசிக்கலாம்.

இந்திய டெஸ்ட் கேப்டன் விராட் கோலியும் கடந்த சில போட்டிகளில் பெரிதாக ரன்கள் சேகரிக்க முடியாமல் திணறி வருகிறார். ஆனால் அவரை நீக்குவது தொடர்பாக யாரும் கேள்வி எழுப்புவதில்லை. அவர் அணியின் கேப்டன் தான். புஜாரா, ரஹானேவுடன் கோலியை ஒப்பிடக்கூடாது தான். ஆனால் இருவருக்கும் வாய்ப்பு வழங்க வேண்டும்.

இவ்வாறு ஆஷிஷ் நெஹ்ரா கூறினார்.

Tags:    

Similar News