விளையாட்டு
இந்திய வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின்

2-வது டெஸ்ட் போட்டி முதல் இன்னிங்ஸ்: இந்தியா 202 ரன்களுக்கு ஆல் அவுட்

Published On 2022-01-03 14:21 GMT   |   Update On 2022-01-03 14:21 GMT
தென் ஆப்ரிக்கா தரப்பில் மார்கோ ஜென்சன் அதிகபட்சமாக 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
ஜோகன்னஸ்பெர்க்:

இந்தியா- தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் ஜோகன்னஸ்பர்க்கில் இன்று தொடங்கியது. முதுகு வலி காரணமாக விராட் கோலி இந்த போட்டியில் விளையாடவில்லை. கே.எல். ராகுல் கேப்டனாக செயல்படுகிறார்.

டாஸ் வென்ற கே.எல். ராகுல் பேட்டிங் தேர்வு செய்தார். 

தொடக்க ஜோடியாக களமிறங்கிய கே.எல் ராகுல், மயங்க் அகர்வால் ஜோடி நிதானமாக ஆடியது. இதையடுத்து மயங்க் அகர்வால் 26 ரன்களுக்கு ஆட்டமிழந்துவிட, அடுத்தடுத்து வந்த புஜாரா 3, ரஹானே 0, விஹாரி 20, ராகுல் 50, பண்ட் 17 ரன்களுக்கு ஆட்டமிழந்தனர். அதன்பின் களமிறங்கிய அஸ்வின் நிதானமாக ஆடி 46 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

முகமது ஷமி 9, பும்ரா 14, சிராஜ் 1 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர்.

இதையடுத்து முதல் இன்னிங்ஸில் இந்தியா 10 விக்கெட்டுகள் இழப்பிற்கு 202 ரன்கள் எடுத்தது.

தென் ஆப்ரிக்கா தரப்பில் மார்கோ ஜென்சன் அதிகபட்சமாக 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார். ராபாடா, ஆலிவியர் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர். 
Tags:    

Similar News