விளையாட்டு
முகமது ஹபீஸ்

சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார் முகமது ஹபீஸ்

Published On 2022-01-03 12:18 IST   |   Update On 2022-01-03 12:18:00 IST
பாகிஸ்தான் அணிக்காக சுமார் 18 வருடங்கள் சர்வதேச கிரிக்கெட் விளையாடி வந்த முகமது ஹபீஸ் தற்போது ஓய்வு முடிவை அறிவித்தள்ளார்.
பாகிஸ்தான் அணியின் அனுபவ சுழற்பந்து வீச்சு ஆல்-ரவுண்டர் முகமது ஹபீஸ். கடந்த 18 ஆண்டுகளாக சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடி வந்த அவர், தற்போது ஓய்வு முடிவு அறிவித்தள்ளார்.

2003-ம் ஆண்டு முகமது ஹபீஸ் ஜிம்பாப்வே அணிக்கெதிராக ஒருநாள் போட்டியில் அறிமுகம் ஆனார். கடைசியாக ஆஸ்திரேலியாவுக்கு எதிராக டி20 உலகக்கோப்பை அரையிறுதியில் பங்கேற்றார்.

ஹபீஸ் முன்னதாக 2020 டி20 உலகக்கோப்பை தொடருடன் ஓய்வு பெறுவதாக அறிவித்தார். கொரோனா வைரஸ் தொற்றால் உலகக்கோப்பை தள்ளிப்போக அவரது ஓய்வும் தள்ளிப்போனது. தற்போது ஓய்வு பெற்றுள்ளார்.



18 வருடங்களாக சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடிய ஹபீஸ் 55 டெஸ்ட், 218 ஒருநாள், 119 டி20 கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி 12,780 ரன்கள் அடித்துள்ளார்.

2018-ம் ஆண்டு டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற ஹபீஸ், 2019 உலகக்கோப்பையுடன் ஒருநாள் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

Similar News