விளையாட்டு
அரை சதம் அடித்த வங்காளதேச அணி வீரர்கள்

3 நாள் ஆட்ட நேர முடிவில் வங்காளதேச அணி ரன் குவிப்பு - 4 பேர் அரை சதம்

Published On 2022-01-03 06:05 GMT   |   Update On 2022-01-03 06:05 GMT
நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட்டின் முதல் இன்னிங்சில் வங்காளதேச அணி 6 விக்கெட்டுகளை இழந்து 401 ரன்கள் குவித்து வலுவான நிலையில் உள்ளது.
மவுன்ட்மாங்கானு:

நியூசிலாந்து- வங்காளதேச அணிகள் மோதும் முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மவுன்ட்மாங்கானுவில் நடைபெற்று வருகிறது.

நியூசிலாந்து முதல் இன்னிங்சில் 328 ரன் குவித்தது. கான்வாய் 122 ரன்னும், நிக்கோலஸ் 75 ரன் னும் எடுத்தனர். ஷோரிபுல் இஸ்லாம், ஹசன் தலா 3 விக்கெட் கைப்பற்றினார்கள்.

பின்னர் முதல் இன்னிங்சை விளையாடிய வங்காள தேச அணி சரியான பதிலடி கொடுத்தது. நேற்றைய ஆட்ட நேர முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 175 ரன் எடுத்து இருந்தது. ஹசன் 70 ரன்னில் ஆட்டம் இழக்காமல் இருந்தார். நஜூமுல் 64 ரன் எடுத்தார்.

இன்று 3-வது நாள் ஆட்டம் நடந்தது. தொடர்ந்து விளையாடிய வங்காள தேசம் ரன்களை குவித்தது. ஹசன் 78 ரன்னில் ஆட்டம் இழந்தார்.

கேப்டன் மொமினூல் ஹக், லிட்டன் தாஸ் சிறப்பாக விளையாடி அரை சதத்தை தொட்டனர். மொமினூல் ஹக் 88 ரன்னிலும் தாஸ் 86 ரன்னிலும் போல்ட் பந்து வீச்சில் வெளியேறினார். 

இதனையடுத்து 3 நாள் ஆட்ட நேர முடிவில் வங்காளதேசம் அணி 401 ரன்கள் குவித்தது. யாசீர் அலி 11 ரன்னிலும் ஹசன் 20 ரன்னிலும் களத்தில் இருந்தனர். அந்த அணி நியூசிலாந்து எடுத்த ரன்னை தாண்டி 73 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.

நியூசிலாந்து தரப்பில் போல்ட், நீல் வாக்னர் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
Tags:    

Similar News