விளையாட்டு
கான்வாய்

கான்வாய் சதம் - முதல் நாள் ஆட்ட முடிவில் நியூசிலாந்து அணி 258 ரன்கள் சேர்ப்பு

Published On 2022-01-01 13:25 IST   |   Update On 2022-01-01 13:25:00 IST
வங்காளதேசத்துக்கு எதிரான டெஸ்டில் முதல் நாள் ஆட்ட நேர முடிவில் நியூசிலாந்து அணி 5 விக்கெட்டுகளை இழந்து 258 ரன்கள் சேர்த்துள்ளது.
மவுண்ட் மவுக்கானு:

வங்காளதேச கிரிக்கெட் அணி 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவதற்காக நியூசிலாந்து சென்றுள்ளது. இரு அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி இன்று தொடங்கியது.

டாஸ் வென்ற நியூசிலாந்து கேப்டன் டாம்லாதம் பேட்டிங்கை தேர்வு செய்தார். அவரும், வில்யங்கும் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். லாதம் ஒரு ரன்னில் ஆட்டம் இழந்தார். வில்யங் 52 ரன்னில் பெலிவியன் திரும்பினார்.

3-வது வீரராக களம் இறங்கிய கான்வாய் அபாரமாக விளையாடி சதம் அடித்தார். 4-வது டெஸ்ட்டில் விளையாடும் அவருக்கு இது 2-வது சதமாகும். 122 ரன்கள் எடுத்திருந்தபோது கான்வாய் ஆட்டம் இழந்தார். அவர் 227 பந்துகளில் 16 பவுண்டரி, ஒரு சிக்சருடன் இந்த ரன்னை எடுத்தார்.

முன்னாள் கேப்டன் ரோஸ் டைலர் 31 ரன்னில் வெளியேறினார்.  முதல் நாள் ஆட்ட நேர முடிவில் நியூசிலாந்து அணி 5 விக்கெட் இழப்புக்கு 258 ரன் எடுத்திருந்தது. வங்காளதேசம் தரப்பில் இஸ்லாம் 2 விக்கெட்டும் ஹோசைன், மொமினுல் ஹக் தலா 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.

Similar News