விளையாட்டு
புள்ளி எடுக்கும் முயற்சியில் டெல்லி வீரர்

புரோ கபடி லீக் - பெங்காலை வீழ்த்தி டெல்லி அணி அபார வெற்றி

Published On 2021-12-30 02:18 IST   |   Update On 2021-12-30 02:18:00 IST
நேற்று நடந்த மற்றொரு போட்டியில் யுபி யோதா மற்றும் குஜராத் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி சமனில் முடிந்தது.
பெங்களூரு:

8-வது புரோ கபடி லீக் போட்டிகள் பெங்களூருவில் நடைபெற்று வருகிறது. இதில் லீக் முடிவில் முதல் 6 இடங்களைப் பிடிக்கும் அணிகள் பிளே-ஆப் சுற்றுக்கு தகுதி பெறும்.

இந்நிலையில், நேற்று இரவு 7.30 மணிக்கு நடந்த முதல் போட்டியில் தபாங் டெல்லி அணி, பெங்கால் வாரியர்ஸ் அணியை எதிர்கொண்டது. 

ஆட்டத்தின் தொடக்கம் முதல் டெல்லி அணி சிறப்பாக ஆடியது. இறுதியில், தபாங் டெல்லி அணி 52 - 35 என்ற புள்ளிக்கணக்கில் அபார வெற்றி பெற்றது. இதன்மூலம் 3வது வெற்றியை பதிவு செய்த டெல்லி அணி புள்ளிப்பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளது. 

Similar News