விளையாட்டு
ஆண் குழந்தையுடன் இர்பான் பதான்

இர்பான் பதானுக்கு மீண்டும் ஆண் குழந்தை

Published On 2021-12-29 16:10 IST   |   Update On 2021-12-29 16:10:00 IST
இரண்டாவதாக பிறந்துள்ள ஆண் குழந்தைக்கு சுலைமான் கான் என பெயரிட்டுள்ளனர்.
மும்பை:

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் இர்பான் பதான். இவர், மாடல் அழகியான சஃபா பாயிக் என்பவரை கடந்த 2016-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் திருமணம் செய்தார். இந்த தம்பதியருக்கு அதே ஆண்டு டிசம்பர் மாதம் ஆண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தைக்கு இர்பான் கான் என பெயரிடப்பட்டது.

இந்நிலையில் அவரது மனைவி மீண்டும் கர்ப்பமுற்றார். தற்போது அவருக்கு இரண்டாவதாக ஆண் குழந்தை பிறந்துள்ளது. இந்த குழந்தைக்கு சுலைமான் கான் என பெயரிட்டுள்ளனர். குழந்தையை கையில் ஏந்தியவாறு உள்ள புகைப்படத்தை பகிர்ந்த இர்பான் பதான், குழந்தையும், மனைவியும் நலமுடன் இருப்பதாக தெரிவித்துள்ளார். 

Similar News