விளையாட்டு
கோப்பு படம்

திருப்பதியில் 22 மாநில அணிகள் பங்கேற்கும் கபடி போட்டி 5-ந் தேதி தொடங்குகிறது

Published On 2021-12-29 12:39 IST   |   Update On 2021-12-29 12:39:00 IST
விளையாட்டு மைதானத்தில் தொடர்ந்து பயிற்சி பெறுவது சிறந்த பழக்கம். ஆரோக்கியமாக இருக்க அனைவரும் விளையாடுவதை பழக்கப்படுத்தி கொள்ள வேண்டும்.
திருப்பதி:

திருப்பதி மாநகராட்சி மற்றும் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் சார்பில் திருப்பதியில் அகில இந்திய அளவிலான கபடி போட்டி நடத்தப்பட உள்ளது.

இதில் இந்தியா முழுவதும் 22 மாநிலங்களில் இருந்து ஆண்கள், பெண்கள் அணி என 40 அணிகள் பங்கு பெறுகின்றன. வருகிற 5-ந் தேதி போட்டி தொடங்குகிறது. தொடர்ந்து 5 நாட்கள் நடக்கிறது.

போட்டிகளை நடத்துவது தொடர்பான ஆலோசனை கூட்டம், போட்டிகள் நடைபேற இருக்கும் இந்திரா மைதானத்தில் நடந்தது. இதில் மாநகராட்சி அதிகாரிகள் ஸ்மார்ட் சிட்டி திட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இதை வெற்றிகரமாக நடத்தி முடிக்க அனைவரும் ஒத்துழைக்க வேண்டும். இது நம் அனைவருக்கும் ஒரு திருவிழா போன்றது.

கபடி என்பது நமது மாநில அரசால் அதிகாரபூர்வ விளையாட்டாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. விளையாட்டு மைதானத்தில் தொடர்ந்து பயிற்சி பெறுவது சிறந்த பழக்கம். ஆரோக்கியமாக இருக்க அனைவரும் விளையாடுவதை பழக்கப்படுத்தி கொள்ள வேண்டும்.

நாட்டிலேயே எந்த மாநகராட்சியிலும் நடைபெறாத வகையில் திருப்பதியில் முதன் முதலாக கபடி போட்டியை நடத்துவது நமது திருப்பதியின் அதிர்ஷ்டமாக கருதுவதாக தெரிவித்தனர்.

Similar News